இந்திய அணிக்கு நேர்ந்த சோகம்… ஷ்ரேயாஸ் ஐயருக்கு முன் ஜடேஜா, கேஎஸ் பரத் பேட்டிங் இறக்கப்பட்டது ஏன்? – ரிப்போர்ட்!

0
3373

ஷ்ரேயாஸ் ஐயருக்கு முன்னர் ஜடேஜா மற்றும் கேஎஸ் பரத் இருவரும் களம் இறக்கப்பட்டது ஏன்? என்பது குறித்த தகவல்கள் பிசிசியை தரப்பிலிருந்து வெளிவந்திருக்கின்றன.

நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 480 ரன்கள் அடித்து வலுவான நிலையை பெற்றது ஆஸ்திரேலியா அணி. இந்திய அணி தற்போது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை செய்து வருகிறது.

- Advertisement -

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில், வழக்கமாக முதல் விக்கெட் இழந்த பிறகு சித்தேஸ்வரர் புஜாரா உள்ளே வருவார். இரண்டாவது விக்கெட்டை இழந்த பிறகு விராட் கோலி களமிறங்குவார். அடுத்ததாக மூன்று விக்கெட்டுகளை இழந்த பிறகு ஷ்ரேயா ஐயர் களம் இறக்கப்படுவார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, முழுக்க முழுக்க சுழல் பந்துவீச்சிக்கு சாதகமாக இருந்ததால் இடது கை – வலது கை பேட்டிங் காம்பினேஷனை கடைபிடிக்க ஷ்ரேயாஸ் ஐயருக்கு முன்னே ஜடேஜா களமிறக்கப்பட்டார்.

நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு முன்னர் ஜடேஜா களமிறங்கினார். ரோகித் சர்மாவின் திட்டமாகக்கூட என்று கருதப்பட்டது. ஆனாலும் சிலர் முன்னர் சுழல் பந்துவீச்சு என்பதால் அவர் இறங்கலாம். ஆனால் இப்போது அப்படி இல்லையே!

- Advertisement -

நன்றாக பேட்டிங் செய்யக்கூடிய பிட்ச்சாக இருக்கிறது. இந்த சமயத்தில் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யவேண்டிய அவசியமென்ன? என்று கேள்வி எழுப்பினர்.

இன்று நான்காம் நாள் ஆட்டத்தில் ஜடேஜா 28 ரன்களுக்கு ஆட்டம் இழந்த பிறகு, கேஎஸ் பரத் உள்ளே களம் இறக்கப்பட்டார். இப்போது ஸ்ரேயாஸ் ஐயர் குறித்த கேள்விகள் தீவிரமாக எழுந்தன. இந்நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் இன்னும் களம் இறக்கப்படாமல் இருப்பதற்கான காரணத்தை கூறியுள்ளது பிசிசிஐ.

பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியான தகவலின்படி, மூன்றாம் நாளிலிருந்து முதுகு பகுதியில் அசவுகரியமாக உணர்கிறார் ஷ்ரேயாஸ் ஐயர். உடனடியாக அவருக்கு ஸ்கேன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதன் அடிப்படையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது என தகவல்கள் வந்திருக்கிறது.

முன்னதாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் அவர் விளையாடவில்லை. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் இந்த காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடாதது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டு இருக்கிறது என பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார் என்பது கூடுதலாக கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.