தேர்வு குழுவிற்கு தொடர்பில்லாத நபர்கள் பிசிசிஐ சாசனத்தை மீறி தேர்வு குழு கூட்டங்களில் கலந்து கொண்டது ஏன்? – முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சராமாரி கேள்வி!

0
166

2014 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி வகித்து வந்தவர் ரவி சாஸ்திரி . இவரது பயிற்சி காலத்தின் கீழ் இந்திய அணி மூன்று 20 ஓவர் உலகக் கோப்பைகளையும் இரண்டு 50 ஓவர் உலகக் கோப்பைகளையும் இழந்து இருக்கிறது .

ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி கூட்டணியில் இந்தியா ஐசிசி தொடர்களில் தோல்விகளை சந்தித்தாலும் டெஸ்ட் போட்டிகளில் மிகப்பெரிய எழுச்சியை பெற்றது என்றே கூறலாம் . இவரது பயிற்சி காலத்தின் கீழ் இந்தியா இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. மேலும் தென்னாப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் வெற்றி இங்கிலாந்தில் இரண்டு டெஸ்ட் வெற்றிகள் என டெஸ்டரங்கில் சிறந்த அணியாக தலைநிமிர்ந்தது .

- Advertisement -

நியூசிலாந்து நாட்டிற்கு சென்று ஒரு நாள் போட்டி தொடர் மற்றும் டி20 போட்டி தொடர்களை வென்றதும் குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் தனது பனிக்காலத்தின் போது நடந்த சில சம்பவங்களை பகிர்ந்திருக்கிறார் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி . இதுகுறித்து விரிவாக பேசியிருக்கும் அவர் தான் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில் தேர்வு குழு எவ்வாறு செயல்பட்டது எனவும் விரிவாக பேசியுள்ளார் .

ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய காலகட்டத்தில் விராட் கோலி ஒரு நாள் போட்டி தொடரின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனைத் தொடர்ந்து அவர் தனது டெஸ்ட் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார் . மேலும் பிசிசிஐ முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி தேர்வு குழு கூட்டங்கள் அனைத்திலும் பங்கேற்றதாக ஒரு சர்ச்சை கடந்த வருடமே வெளியானது .

பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய பிறகு தற்போது மனம் திறந்து இருக்கிறார் ரவி சாஸ்திரி . இது குறித்து பேசி இருக்கும் அவர் தன்னுடைய ஏழு வருட பதவி காலத்தில் ஒருமுறை கூட தேர்வு குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார் . இந்த ஏழு வருடத்தில் தன்னை ஒருமுறை கூட தேர்வு குழு கூட்டத்திற்கு அழைக்கவில்லை எனவும் தெரிவித்தார் . ஒரு பயிற்சியாளராக தேர்வு குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுவது தன்னுடைய வேலை இல்லை என்றாலும் அவர்கள் தன்னிடம் கருத்தாவது கேட்டு இருக்கலாம் என தெரிவித்தார் .

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய ரவி சாஸ்திரி ” தேர்வு குழு கூட்டம் எவ்வாறு நடக்கிறது என்று எனக்கு தெரியாது . ஏழு வருடமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தாலும் ஒருமுறை கூட தேர்வு குழுவின் கூட்டத்தில் நான் கலந்து கொண்டதில்லை . ஆனால் கலந்து கொண்டவர்களின் மூலமாக நான் தெரிந்து கொண்டது என்ன என்றால் கடந்த மூன்று அல்லது நான்கு வருடங்களாக தெரு குழுவிற்கு சம்பந்தமில்லாத நபர்களும் தேர்வு குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் . இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சாசனத்திற்கு எதிரான ஒன்று என்று மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார் .

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சௌரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில் தான் தேர்வு குழுவிற்கு தொடர்பில்லாத நபர்கள் தேர்வு குழு கூட்டத்தில் கலந்து கொண்டதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கலந்து கொண்டதை தான் ரவி சாஸ்திரி மறைமுகமாக சுட்டிக்காட்டி உள்ளார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .