இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஏன் பும்ரா வாங்க கூடாது.. 5 காரணங்கள் இதோ

0
8

ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் வரும் ஜூன் 19ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் யார் கேப்டனாக நியமிக்கப்பட போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் பும்ரா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக பும்ரா இருந்தாலும், அவருக்கு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பு வழங்க கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதற்கு முக்கிய காரணம் பும்ராவின் காயம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய தடையாக உள்ளது. அடிக்கடி ஏற்படும் காயங்கள், குறிப்பாக 2024-25 பார்டர்-கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்டில் முதுகு வலி காரணமாக பந்து வீச முடியாமல் போனது, அவரது உடல் தகுதி குறித்த கேள்விகளை எழுப்பியது.

- Advertisement -

பந்து வீச்சாளரின் பணிச்சுமை:

கேப்டனாக இருக்க, ஒரு வீரர் தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் களமிறங்க வேண்டும். பிசிசிஐ, ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்கும் தயாராக இருக்கும் வீரரை துணை கேப்டனாகவோ கேப்டனாகவோ நியமிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது. பும்ராவின் காயம் இதற்கு தடையாக உள்ளது.

ஒரு வேகப்பந்து வீச்சாளராக, பும்ரா அணியின் முதன்மை ஆயுதமாக உள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியில் அவர் அதிக ஓவர்கள் வீச வேண்டியிருக்கும், இது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சவாலானது. கேப்டனாக இருப்பது, மைதானத்தில் உத்திகளை வகுப்பது மற்றும் அணியை வழிநடத்துவது போன்ற கூடுதல் பொறுப்புகளை சுமக்க வேண்டும்.

- Advertisement -

நீண்ட கால திட்டம் தேவை:

பும்ராவை துணை கேப்டனாகவோ அல்லது தற்காலிக கேப்டனாகவோ பயன்படுத்திய போதிலும், நீண்டகால கேப்டனாக பேட்ஸ்மேன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது இந்திய கிரிக்கெட்டின் பாரம்பரிய அணுகுமுறையாக உள்ளது.இந்திய அணியின் உத்திகள் பேட்ஸ்மேன்களை மையமாகக் கொண்டவை. கேப்டனாக ஒரு பேட்ஸ்மேன் இருப்பது, ஆடுகள நிலைமைகளை மதிப்பிடுவதற்கும், பேட்டிங் உத்திகளை வகுப்பதற்கும் உதவியாக இருக்கும்.

இதையும் படிங்க: ரோகித் ஒய்வு: இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற போட்டி போடும் 5 வீரர்கள்

பும்ரா, ஒரு பந்து வீச்சாளராக, இந்த அம்சத்தில் பின்னடைவை சந்திக்கலாம். இதனால் தான், சுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் போன்ற அனுபவமிக்க பேட்ஸ்மேன்கள் கேப்டன் பொறுப்புக்கு முன்னுரிமை பெறுகின்றனர். பும்ராவுக்கு தற்போது முதுகு பகுதியில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடிந்துவிடும் அபாயத்தில் இருக்கிறது. இதனால் அவருக்கு அடிக்கடி ஓய்வு வழங்க பிசிசியை முடிவெடுத்து இருக்கிறது இதனாலும் அவருக்கு கேப்டன் பதவியை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -