ரோகித் ஒய்வு: இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற போட்டி போடும் 5 வீரர்கள்

0
12

ரோகித் சர்மா இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முக்கிய தூணாகவும், கேப்டனாகவுன் திகழ்ந்தவர்.  வயது மற்றும் எதிர்கால டெஸ்ட் சாம்பியன்ஷிப் சவால்களை கருத்தில் கொண்டு தற்போது அவர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.இதனால், அவருக்கு மாற்றாக இளம் வீரர்களை இந்திய அணி தயார் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ரோகித் சர்மாவுக்கு மாற்றாக இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெறக்கூடிய இளம் வீரர்களைப் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம்.

இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பவர் ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே ஸ்ரேயாஸ் ஐயர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் சிறப்பாக விளையாடிய இருந்தாலும் தன்னுடைய இடத்தை அவர் இழந்தார். தற்போது அவர் நல்ல பார்மில் இருக்கும் நிலையில், மீண்டும் அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்தால் அதனை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார்.

- Advertisement -

கருண் நாயர், ருதுராஜ்:

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் கருண் நாயர். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக விளையாடி வரும் நாயர் டெஸ்ட் அணியில் ஏற்கனவே தன்னுடைய திறமையை வெளிப்படுத்துகிறார். ஆனால் ஏழு ஆண்டுகளுக்கு மேல் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ரோகித் சர்மாவுக்கு பதில் அவர் நடுவரிசையில் களம் இறங்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ருதுராஜ். 27 வயதான ருதுராஜ் கெய்க்வாட், இன்னும் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்கவில்லை என்றாலும், உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது நிலையான ஆட்டத்தால் கவனம் ஈர்த்துள்ளார். மகாராஷ்டிரா அணிக்காக ரஞ்சி டிராஃபியில் இவரது சிறப்பான ஆட்டம், நீண்ட இன்னிங்ஸ்களை ஆடும் திறனை வெளிப்படுத்துகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய இளம் அணியை வழிநடத்திய அனுபவமும் இவருக்கு பலம் சேர்க்கிறது. ரோகித்தின் அதிரடி ஆட்டத்தை இவர் பிரதிபலிக்காவிட்டாலும், தொடக்கத்தில் நிதானமாக ஆடி, பின்னர் வேகமெடுக்கும் திறன் இவரை ஒரு சிறந்த மாற்றாக அமைக்கலாம்.

- Advertisement -

2 இளம் வீரர்களுக்கு இடையே போட்டி:

இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் தேவ்தத் படிக்கல். 24 வயதான தேவ்தத் படிக்கல், இந்திய அணியில் பெரிய அளவில் இன்னும் டெஸ்ட் வாய்ப்பு பெறவில்லை என்றாலும், உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்துள்ளார். கர்நாடக அணிக்காகவும், ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும் இவர் ஆடிய ஆட்டங்கள், இவரது தொழில்நுட்ப ரீதியான பேட்டிங்கை வெளிப்படுத்துகின்றன. இவரது இடது கை பேட்டிங், ரோகித்தின் வலது கை பேட்டிங்கிற்கு மாறுபட்ட பாணியை வழங்கலாம், இது அணிக்கு பேலன்ஸ் தரும்.

இதையும் படிங்க: வரலாறா இல்லை எதிர்காலமா?.. தோனிக்கு ஏற்பட்டிருக்கும் பெரிய தலைவலி.. ரசிகர்களின் ஆதரவு எதிர்ப்பு

இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் சர்ஃபராஸ் கான். 27 வயதான சர்ஃபராஸ் கான், உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான பேட்ஸ்மேனாக விளங்குகிறார். மும்பை அணிக்காகவும், ரஞ்சி டிராஃபியில் இவரது அதிக ரன் குவிப்பு, டெஸ்ட் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்க வழிவகுக்கலாம். இவர் மிடில் ஆர்டரில் ஆடினாலும், தொடக்க வீரராகவும் ஆடும் திறன் உள்ளவர். ரோகித்தின் இடத்தை நிரப்புவதற்கு இவரது ஆக்ரோஷமான ஆட்டமும், நீண்ட இன்னிங்ஸ் ஆடும் திறனும் உதவலாம்.

- Advertisement -