யார் துவக்க ஆட்டக்காரர்? பாகிஸ்தான் நிருபர் கேள்விக்கு ரோகித் சர்மா ஆச்சரியமான பதில்!

0
182
Rohit sharma

ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் கூட்டணி இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டில் நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்து, ஒரு புதுவிதமான ஆட்ட அணுகுமுறை மனப்பான்மையை அணிக்குள் கொண்டு வந்து இருக்கிறது என்று கூறலாம்.

இந்த கூட்டணி இப்படி ஒரு முயற்சியை செய்ததற்கு முக்கிய காரணம், டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி தோற்ற விதம்தான். இதனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியில் உடனடி மாற்றங்கள் தேவைப்பட்டது. இந்திய கிரிக்கெட் நிர்வாகம் புதிய கேப்டனாக ரோகித் சர்மாவை புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கொண்டுவந்தது.

- Advertisement -

இவர்கள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்ததோடு, மூத்த வீரர்களான தினேஷ் கார்த்திக் அஸ்வின் போன்றவர்களையும் மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தார்கள். அத்தோடு மட்டுமில்லாமல் வித்தியாசமான பேட்டிங் மற்றும் பௌலிங் கூட்டணிகளை உருவாக்கி பரிசோதனை செய்து பார்த்தார்கள். இதன் விளைவாக தற்போது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிற்கு ஒரு முழுமையான அணி கிடைத்திருக்கிறது என்று கூறலாம்.

நடந்து முடிந்த இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடர்களில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் முதலில் இஷான் கிஷானும், அடுத்து ரிஷப் பண்ட்டும், அதற்கு அடுத்து சூரியகுமார் துவக்க ஆட்டக்காரர்களாக வந்தார்கள். இந்திய அணிக்கு டி20 போட்டிகளில் கேஎல் ராகுல் துவக்க ஆட்டக்காரராக இருக்கிறார். அவர் குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருந்ததால் மற்ற வீரர்கள் துவக்க இடத்தில் பரிசோதிக்கப் பட்டார்கள். தற்போது அவர் மீண்டும் அணிக்குள் ஆசிய கோப்பைக்கு வந்திருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியில் ரோகித் சர்மா ரோடு ஆட்டத்தை யார் துவக்குவார்கள் என்ற கேள்வி பலமாகவே இருக்கிறது.

இந்த நிலையில் நாளை பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோத இருப்பதற்கு முன்னாள் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எதிர்கொண்டார். அதில் பல்வேறு விதமான கேள்விகள் முன் வைக்கப்பட்டது. குறிப்பாக ரோகித் சர்மாவுடன் யார் துவக்க வீரராக களம் இறங்குவார்கள் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் ஓகே கேள்வி ஒன்றை எழுப்பினார்.

- Advertisement -

இதற்கு பதிலளித்த ரோகித்சர்மா ” புதிய விஷயங்களை முயற்சிக்க முடிவு செய்துள்ளோம். அதில் சிலது வேலைசெய்யும் சிலது செய்யாமல் போகும். முயற்சி செய்வதால் எந்த பாதிப்பும் வராது. முயற்சி செய்யாவிட்டால் எந்த பதில்களும் கிடைக்காது. நாளை வரை இருந்தால் அது என்னவென்று உங்களுக்கு தெரியும். ஆனால் நாங்கள் ஒரு குழுவாக புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்ப்பது என்று முடிவு செய்து இருக்கிறோம். கடந்த ஆறு எட்டு மாதங்களில் புதிய முயற்சியால் எங்களுக்கு பல புதிய பதில்கள் கிடைத்திருக்கின்றன. நாங்கள் புதிய விஷயங்களை முயற்சி செய்த காரணத்தால் தான் இவைகள் கிடைத்தது ” என்று ஆழமாக தெரிவித்திருக்கிறார்!

பத்து மாதங்களுக்கு முன்பு 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி நாளை போட்டி நடைபெறும் துபாய் மைதானத்தில் தான் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு ரோகித் சர்மாவின் தற்போதைய இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்று பார்ப்போம்!