“யார் வேணா ஐடியா தந்திருக்கட்டும்.. ஆனா ஷாகிப் நீங்க இப்படி செஞ்சிருக்க கூடாது!” – சோயப் மாலிக் அதிரடியான விமர்சனம்!

0
2343
Malik

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அடையாளமாக, காலம் முழுவதும் நிலைக்க போகும் ஒரு நிகழ்வு நேற்று பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்ட போட்டியின் போது நடைபெற்றது.

ஒவ்வொரு உலகக்கோப்பைக்கும் ஒரு மறக்க முடியாத நினைவுகள் அமைந்திருக்கும். கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது பென்ஸ்டோக்ஸ் பேட்டின் மீது பந்து பட்டு பவுண்டரி சென்றது, மேலும் பவுண்டரிகள் கணக்குப்படி இங்கிலாந்து சாம்பியன் என அறிவித்தது இருக்கிறது.

- Advertisement -

இப்படி ஒவ்வொரு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஒவ்வொரு முக்கிய சம்பவங்கள் அந்த உலகக் கோப்பையின் அடையாள நிகழ்வாக மக்களிடையே பதிவாகிவிடும். இப்படித்தான் நேற்று மேத்தியூஸ் டைம் அவுட் முறையில் ஆட்டம் இழந்த நிகழ்வு பதிவாகி இருக்கிறது.

நேற்று சதிரா ஆட்டம் இழந்து உள்ளே வந்த மேத்யூஸ் இரண்டு நிமிடங்களுக்குள் பந்தை சந்திக்க தயாராகவில்லை என்று கூறி, ஷாகிப் அல் ஹசன் கேப்டனாக நடுவர்களிடம் முறையிட, அவர் ஆட்டம் இழந்தவராக அறிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

ஆனால் இன்று மேத்யூஸ் தான் இரண்டு நிமிடங்களுக்கு முன்பாகவே ஹெல்மெட் கேட்டதாகவும், தான் காலத்தாமதம் செய்யவில்லை என்றும் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் நேற்று ஷாகிப் அல் ஹசன் கூறும் பொழுது தனது அணியின் வீரர் ஒருவர் இப்படியான டைம் அவுட் விதியை தன்னிடம் கூறியதால் தான் கேட்டதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் கூறும்பொழுது “தன்னுடைய அணியின் வீரர் ஒருவர் நேரம் முடிந்து விட்டதாக தன்னிடம் கூறியதால் தான் அப்பில் செய்ததாக ஷாகிப் கூறியிருந்தார்.

அதே ஃபீல்டர் மேத்யூஸ் ஹெல்மெட்டில் உள்பட்டை அருந்தபொழுது தான் இதை போய் ஷாகிப் இடம் கூறியிருக்கிறார். ஏன் இப்படி ஒரு விதியை அதற்கு முன்பாகவே அவர் தன் கேப்டனிடம் சொல்லவில்லை? ஹெல்மெட்டை அந்த நேரத்தில் மாற்றிதானே ஆகவேண்டும். அவர் இதை பயன்படுத்திக் கொள்ள பார்த்திருக்கிறார். யோசித்துப் பாருங்கள்.

யார் என்ன சொன்னாலும் ஒவ்வொரு கேப்டனுக்கும் ஒரு பார்வை இருக்கும். நான் கேப்டனாக இருந்திருந்தால் நிச்சயம் இதற்காக நான் மேல்முறையீடு செய்திருக்க மாட்டேன். ஹெல்மெட் பழுதடைதல் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்!” என்று கூறியிருக்கிறார்!