“யார் வந்தாலும் இந்த இந்திய பையன் இடத்தை ஒன்னும் பண்ண முடியாது!” – சைமன் காடிச் பரபரப்பு பேச்சு!

0
29822
ICT

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக உள்நாட்டில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அணிக்கு சூரிய குமார் யாதவ் தலைமை தாங்குகிறார்.

இந்த நிலையில் இந்த தொடரில் விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் மிக வலிமையான முன்னிலையை பெற்று நிற்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று அசாம் கவுகாத்தி மைதானத்தில் மூன்றாவது போட்டியில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றி, வாய்ப்பளிக்கப்படாத மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் இடத்திற்கு நகரும்.

ஆஸ்திரேலியா அணி உலக கோப்பையை வென்ற அடுத்த தொடரில் அதுவும் இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக ஒரு தொடரை இழக்கும். மேலும் அவர்கள் அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்கான முக்கிய தொடரில் தோற்பது பின்னடைவுதான்.

இந்தக் குறிப்பிட்ட தொடரில் இந்திய இளம் வீரர்களான ருத்ராஜ், ஜெய்ஸ்வால் இசான் கிஷான் மற்றும் ரிங்கு சிங் நால்வரது பேட்டிங்கும் மிக அபாரமாக இருந்து வருகிறது. இந்திய அணிக்கு அடுத்து முன்னணி வீரர்கள் வரும்பொழுது யாரை வெளியேற்றுவது என்கின்ற பெரிய பிரச்சனை தெரிகிறது.

- Advertisement -

இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் சைமன் காடிச் கூறுகையில் “ரிங்கு சிங் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு மிகச் சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து வழங்கினார். தற்பொழுது அதையே அவர் இந்திய அணிக்கும் செய்து வருகிறார். அவர் ஒரு சிறப்பான பாத்திரத்தை வகிக்கிறார்.

பேட்டிங் வரிசையில் நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் விளையாடும் பொழுது அந்த பாத்திரத்தை எல்லோராலும் நிரப்பி விட முடியாது. திடீரென உள்ளே வந்து 9 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது பெரிய விஷயம்.

மேலும் முன்னணி வீரர்கள் வரும்பொழுது அணிக்குள் நிறைய போட்டிகள் இருக்கும். ஆனால் ரிங்கு மிகப்பெரிய வேலையை செய்து வருகிறார். அது எளிதானது கிடையாது. அவர் பந்தை பார்த்து அதற்கு ஏற்றபடி விளையாடுகிறார். அவர் முன்கூட்டியே பந்தை எப்படி ஆட வேண்டும் என்று தீர்மானிப்பதில்லை!” என்று கூறியிருக்கிறார்!