மகளிர் டி20 உலக கோப்பை.. நியூசி ஆஸி போட்டி.. இந்திய அணி செமி பைனலுக்கு போக என்ன நடக்க வேண்டும்? – முழு அலசல்

0
245
ICT W

தற்போது யுனைடெட் அரபு எமிரேடில் மகளிர் டி20 உலக கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நியூசிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் யார் வெல்வது? இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

இந்த மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில் முதல் பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்று இருக்கின்றன.

- Advertisement -

முதல் போட்டியிலேயே சிக்கிய இந்திய அணி

இந்திய அணி மகளிர் அணி இந்த டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகளில் குறைந்தபட்சம் ஒரு அணியை வெல்ல வேண்டியது இந்திய அணிக்கு அவசியமாக இருந்தது. தோற்றது மட்டும் இல்லாமல் ரன் ரேட்டையும் இந்திய அணி இழந்துவிட்டது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக குறைந்த இலக்கை துரத்திய போதிலும் 18.5 ஓவரில் வெற்றி பெற்றதால் பெரிய ரன் ரேட் கிடைக்கவில்லை. தற்போது இந்திய அணி மைனஸ் 1.217 ரன் ரேட்டில் பாகிஸ்தானுக்கு அடுத்து நான்காவது இடத்தில்தான் இருக்கிறது. பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி உடன் + 0.555 ரன் ரேட்டில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

நியூசிலாந்து ஆஸ்திரேலியா முதலில் யார் வெல்ல வேண்டும்?

இந்த நிலையில் இன்று புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. நியூசிலாந்து 2.900, ஆஸ்திரேலியா 1.908 ரன் ரேட் உடன் வலிமையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியை வென்றால், இந்திய அணி அடுத்து மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக வெற்றி பெறுவதோடு நல்ல ரன் ரேட்டை எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க : மயங்க் யாதவ் வேகம் எங்களுக்கு இதனால பிரச்சனையே கிடையாது.. அதெல்லாம் சாதாரணம் – பங்களாதேஷ் கேப்டன் பேச்சு

அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியை வென்றால், இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையை அணியை வெல்வதோடு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளில் ஏதாவது ஒன்றை விட கூடுதல் ரன் ரேட்டை பெற வேண்டும். தற்பொழுது இது நடந்தால் மட்டுமே இந்திய அணியால் அரையிறுதிக்கு செல்ல முடியும். நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது மட்டுமில்லாமல் 58 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை உண்டாக்கி விட்டது.

- Advertisement -