இந்திய அணியின் அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவின் வேகம் தங்களுக்கு எந்தவித பிரச்சனையையும் ஏற்படுத்தாத என பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் சாந்தோ கூறி இருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மணிக்கு 156 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி மயங்க் யாதவ் கவனத்தையும் கவர்ந்திருந்தார். அவருடைய பந்துவீச்சில் வேகம் மட்டும் இல்லாமல் கட்டுப்பாடும் துல்லியமும் மிகச் சிறப்பாக இருக்கிறது. இதன் காரணமாக அவரை விளையாடுவது கடினமாகிறது.
முதல் ஓவரிலேயே அசத்திய மயங்க் யாதவ்
நேற்று முன்தினம் நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக மயங்க் யாதவ் அறிமுகமானார். நான்கு மாத காலம் காயத்தில் இருந்து மீண்டு வந்த அவரை நம்பிக்கை வைத்து நேரடியாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கூட்டி வந்தது.
மயங்க் யாதவ் போட்டியின் ஆறாவது ஓவரை தன்னுடைய முதல் ஓவராக வீசினார். அந்த ஓவரின் ஆறு பந்துகளையும் சரியாக சந்தித்து விளையாட முடியாமல் பங்களாதேஷ் பேட்ஸ்மேன் தடுமாறி ஓவர் மெய்டன் ஆனது. தன்னுடைய சர்வதேச முதல் ஓவரையே மெய்டனாக வீசி மயங்க் யாதவ் அசத்தினார்.
மயங்க் யாதவ் வேகம் பிரச்சனை இல்லை
இப்படியான நிலையில் பங்களாதேஷ் கேப்டன் தன்னுடைய பத்திரிகையாளர் சந்திப்பில் மயங்க் யாதவ் வந்து வீச்சின் வேகம் தங்களுக்கு எந்த விதமான பிரச்சினையையும் உண்டு செய்யாது என்று கூறியிருக்கிறார். அதே சமயத்தில் அவரை சிறந்த பந்துவீச்சாளர் என்று ஏற்கவும் செய்திருக்கிறார்.
இதையும் படிங்க : ஒரு நிமிட வேலைதான்.. ஆனா எனக்கு 2 வருஷம் ஆச்சு.. அதை கத்துகிட்டு வந்து இருக்கேன் – வருண் சக்கரவர்த்தி பேச்சு
இது குறித்து பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் சாந்தோ கூறும்பொழுது “எங்களிடம் மயங்க் யாதவ் போன்ற மிக வேகமாக வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை நாங்கள் வலையில் சந்தித்து விளையாடி பயிற்சி பெற்று வருகிறோம். இதன் காரணமாக எங்களுக்கு மயங்க் யாதவை சந்திப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. அவரது பந்துவீச்சு குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. அதே சமயத்தில் அவர் சிறந்த பந்துவீச்சாளர்” என்று கூறி இருக்கிறார்.