நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு மீதம் 2 போட்டிகள் இருக்கிறது. அந்த அணி எப்போதும் இல்லாத அளவுக்கு தடுமாறி வரும் நிலையில் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் தொடர்கிறது. எனவே தோனி தற்போது ஒரு வினோதமான சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
நேற்று கேகேஆர் அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணிக்கு இளம் வீரர்கள் அதிரடியாக விளையாட இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் மூன்றாவது வெற்றி கிடைத்தது. இருந்த போதிலும் சிஎஸ்கே புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் தான் இருந்து வருகிறது.
சிஎஸ்கேவின் சிறப்பு வரலாறு
சிஎஸ்கே அணி ஐபிஎல் வரலாற்றில் 16 ஆண்டுகள் விளையாடி வருகிறது. இத்தனை ஆண்டுகளில் இதுவரை ஒரு முறை கூட புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் சிஎஸ்கே அணி பின்தங்கியது கிடையாது. மேலும் இந்த 16 ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே அணியால் தகுதி பெற முடியாமல் இருந்திருக்கிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி கடைசி இரண்டு போட்டிகளையும் வென்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தங்காமல், தங்களின் சிறப்பு வரலாற்றை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நெருக்கடி ஒரு பக்கத்தில் இருக்கிறது. எனவே தோனி வெற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்து அணியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது.
தோனிக்கு வினோத நெருக்கடி
அதே சமயத்தில் நேற்றைய போட்டியில் வெளிநாட்டு வீரர்களில் சாம் கரனை நீக்கிவிட்டு துவக்க ஆட்டக்காரர் கான்வேவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. எதிர்காலத்தில் எப்படியான அணியை அமைப்பது குறித்து தற்பொழுது பரிசோதனைகளை தோனி செய்து வருகிறார். இந்த பரிசோதனைகளை செய்யும் பொழுது வெற்றி வராமலும் போகலாம். ஒரு பக்கத்தில் தோனி பரிசோதனைகளை எதிர்காலத்திற்காக செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட் கமெண்ட்ரி மோசமா இருக்கு.. சுத்தமா தரமே கிடையாது.. எல்லாமே அஜெண்டாதான் – ரோகித் சர்மா விமர்சனம்
தற்போது தோனி சிஎஸ்கே அணியை பத்தாவது இடத்திலிருந்து மீட்டு சிறப்பு வரலாற்றை காப்பாற்ற வேண்டுமா? இல்லை எதிர்கால சிஎஸ்கே அணியை உருவாக்குவதற்காக பரிசோதனைகளை செய்ய வேண்டுமா? என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தோனியின் நேற்றைய பேச்சில் இருந்து பார்க்கும் பொழுது, மீதம் இருக்கும் போட்டிகளை எதிர்கால சிஎஸ்கே அணியை உருவாக்குவதற்காக பயன்படுத்த நினைக்கிறார் என்று தெரிகிறது. சிஎஸ்கே இத்துடன் சேர்த்து தனது சிறப்பு வரலாற்றை தக்க வைக்குமா? என்று பார்க்கலாம்!






