குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணி எது ?

0
3557

16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தொகுதி சுற்று போட்டி இன்று மாலை நடைபெற இருக்கிறது . இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் .. முன்னதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கே அணி குஜராத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது .

புதன்கிழமை நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி லக்னோ அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது தகுதி சுற்று போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. குஜராத் மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் இன்று இரண்டாவது தகுதி சுற்றுப்போட்டியில் மோத இருக்கின்றன .

- Advertisement -

இந்தத் தொடர் முழுவதிலும் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட குஜராத் சென்னை அணியுடன் முதல் முறையாக தோல்வியை சந்தித்து இருக்கிறது . கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் அந்த அணி சிஎஸ்கே அணியுடன் தோல்வியை சந்திக்கவில்லை . இந்த ஆண்டு நடைபெற்ற இரண்டு லீக் ஆட்டங்களிலும் சென்னை அணியை வீழ்த்தி இருந்தது . ஆனால் துரதிஷ்டவசமாக முதலாவது தகுதி சுற்று போட்டியில் சிஎஸ்கே அணி இடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருக்கிறது .

கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி இந்த முறையும் மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முனைப்பு காட்டும் என்பதால் இந்தப் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது . மும்பை அணி தொடரின் இடையே சில போட்டிகளில் மோசமாக ஆடினாலும் இறுதிக்கட்டத்தில் அபாரமாக ஆடி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது . லக்னோ அணியுடன் மும்பை ஆடிய விதம் அவர்கள் ஏன் ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் என்பதை காட்டும் விதத்தில் அமைந்திருந்தது .

அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் அணியில் இல்லாத நிலையில் இளம் வீரர்கள் மிகச் சிறப்பான பங்களிப்பை மும்பை அணிக்கு அளித்து வருகின்றனர் . இதனால் இளம் வீரர்களின் உத்வேகத்துடன் குஜராத் அணியை வீழ்த்தும் முனைப்பில் இருக்கிறது மும்பை . மீண்டும் ஒரு எல் கிளாசிகோ பைனலாக இது அமையும்மா என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருந்து வருகிறது .

- Advertisement -

ஒருவேளை இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான ஆட்டம் மலையால் கைவிடப்பட்டால் எந்த அணி தகுதி பெறும் என்ற கேள்வியும் ரசிகர்களிடம் இருக்கிறது . புள்ளிகளின் அடிப்படையில் குஜராத் அணி முதல் இடத்தில் இருப்பதால் ஒருவேளை இந்த போட்டி மழை அல்லது இயற்கை சீற்றத்தால் கைவிடப்பட்டால் குஜராத் அணி தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் .

ஆனால் குஜராத்தின் வானிலை அறிக்கையின்படி அங்கு மழைக்கான வாய்ப்பு அறவே இல்லை இதனால் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் . குஜராத் மைதானம் பெரும்பாலான போட்டிகளில் பேட்ஸ்மேன் களுக்கு சாதகமாக இருப்பதால் இந்தப் போட்டியில் ரன் மழை பொழியவே அதிக வாய்ப்பு இருக்கிறது .

- Advertisement -