“இந்திய அணியின் கிங் யாரு? பிரின்ஸ் யாரு?” – விராட் கோலியின் தரமான பதில்!

0
284
Viratkohli

இந்திய கிரிக்கெட் புதிய வீரர்களை உள்வாங்கிக் கொண்டு, அவர்களின் வழியாக புதிய உச்சங்களைத் தொட பயணிப்பதற்கான காலக்கட்டத்தில் நிற்கிறது!

இந்திய கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் கவாஸ்கர் அடுத்து சச்சின் இன்று பேட்டிங் யூனிட்டுக்கு தலைமை ஏற்று வழி நடத்தி கோலோச்சினார்கள்.

- Advertisement -

சச்சின் ஓய்வுக்கு பிறகு அவரது இடத்தை பேட்டிங் யூனிட்டில் நிரப்பக்கூடியவராக விராட் கோலி உருவெடுத்தார். இந்திய அணியை பல ஆட்டங்களில் தனி ஒரு வீரராக வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

தற்பொழுது விராட் கோலியின் இடத்திற்கு ஒரு இளம் வீரர் உருவாகி வளர வேண்டிய தேவையும் இடமும் இருக்கின்றது. இந்த இடத்தை நிரப்பக்கூடிய இந்தத் தேவையைத் தீர்க்கக்கூடிய இளம் வீரராக சுப்மன் கில் இருக்கிறார்.

விராட் கோலியை கிங் கோலி என்று அழைப்பது போல சுப்மன் கில்லை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பிரின்ஸ் என்று அழைக்கிறார்கள். அதாவது ராஜா விராட் கோலி, இளவரசர் கில் என்று அர்த்தப்படுத்துகிறார்கள்.

- Advertisement -

தற்பொழுது இந்திய கிரிக்கெட்டில் ராஜா யார் இளவரசன் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசிய விராட் கோலி
“அவர் வளரவும், அவர் புரிந்து கொள்ளவும், அவருக்கு உதவவும் நான் ஆர்வமாக இருக்கிறேன். இதனால் அவர் நீண்ட நேரம் விளையாடிதொடர்ந்து செயல்பட முடியும். இதனால் இந்திய கிரிக்கெட் பயனடைகிறது.

கிங் மற்றும் பிரின்ஸ் போன்ற குறிச்சொற்கள் மற்றும் அந்த வகையான விஷயங்கள் எல்லாம் பொதுமக்களும் பார்வையாளர்களும் பார்க்க நன்றாக இருக்கும். ஆனால் எந்த ஒரு மூத்த வீரரின் வேலையும் இளம் வீரர்களை மேம்படுத்த உதவுவதும், தங்கள் பெற்ற நுண்ணறிவை அவர்களுக்கு வழங்குவதுதான்.

உயர்மட்ட கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதற்கு அவரிடம் கற்றுக்கொள்ள இருக்கும் ஆர்வம் மிக நல்ல விஷயம். அவர் ஒரு திறமை கொண்ட அழகான இளம் வீரர். அவர் அற்புதமாக விளையாடி வருகிறார். அவர் இந்த டெஸ்ட் போட்டியிலும் அதையே தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.

கில் விளையாட்டைப் பற்றி என்னிடம் நிறைய பேசுகிறார். அவர் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார். அவர் உயர் மட்ட கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான அற்புதமான திறனையும் மனநிலையையும் கொண்டிருக்கிறார். எங்களுக்குள் நல்ல புரிதலோடு மரியாதையின் அடிப்படையில் நல்ல உறவு இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!