யாரு சாமி இவன்? “டீம்ல ஒட்டிக்க விளையாடற ஆள் நான் கிடையாது.. டோன்ட் கேர்?” – சர்துல் ஓபன் டாக்!

0
683
Shardul

சர்வதேச கிரிக்கெட் அணிக்கு ஒரு வேகப்பந்து பேச்சு ஆல்ரவுண்டர் கிடைப்பது என்பது மிகப்பெரிய பொக்கிஷம் மாதிரி. அவ்வளவு எளிதில் ஒரு தரமான வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் அமைவது கிடையாது.

நிலைமை இப்படி இருக்கும் பொழுது, ஒரு அணியில் இருக்கும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டருக்கு காயம் ஏதும் ஏற்பட்டால், அவருக்கு மாற்று வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இருப்பது என்பது பொக்கிஷத்திலும் பொக்கிஷம். இன்றைய அளவில் நிறைய நாடுகளுக்கு இந்த வசதி கிடையாது.

- Advertisement -

சில நாட்களுக்கு முன்பு கவுதம் கம்பீர் உலகக் கோப்பைக்கான இந்திய அணி தயாரிப்பு குறித்து பேசும் பொழுது, ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றுக் குறித்து நாம் யோசிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டே இருந்தார். இந்திய அணியில் அப்பொழுது அவருக்கான இடத்திற்கான பரிசோதனைகள் எதுவும் நடைபெறவில்லை.

தற்போது இந்திய அணி நிர்வாகம் மிகச் சிறப்பான முறையில் சர்துர் தாகூரை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முழுவதுமாக வாய்ப்புகள் தந்து பரிசோதித்து இருக்கிறது.

இந்தத் தொடரில் சர்துல் தாகூரின் பந்துவீச்சு மிகச் சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது. முதல் போட்டியில் ஒரு விக்கெட்டை கைப்பற்றிய அவர், இரண்டாவது போட்டியில் மிக முக்கியமான நேரத்தில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுத்தார். தொடரை முடிவு செய்யும் மூன்றாவது போட்டியில், அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்படி அவரது பந்துவீச்சு செயல்பாடு முன்பை விட புத்திசாலித்தனமாகவும் தாக்கம் நிறைந்ததாகவும் இருக்கிறது.

- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில், நான்காவது வேகப்பந்துவீச்சாளருக்கான இடத்தில் சர்துல் தாகூர் இடம்பெறுவது ஏறக்குறைய உறுதி என்கிற நிலைதான் இருக்கிறது.

தற்பொழுது இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட பொழுது அதற்கு பதில் அளித்த அவர் “நான் ஒரு ஆல்ரவுண்டராக லோயர் மிடில் ஆர்டரின் கடைசியில் வருவது மிகவும் முக்கியமானது. எட்டு மற்றும் ஒன்பதாம் இடங்களில் விளையாடும் பொழுது அணியின் பேட்டிங் ஆழம் அதிகரிக்கிறது. எனவே இந்த ரோல் மிகவும் முக்கியமானது.

எனக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால், நான் அணியின் வெற்றிக்காக முயற்சி செய்வேன். மற்றபடி நான் அணியில் எனது இடத்திற்காக விளையாடுகின்ற வீரர்களைப் போன்றவன் கிடையாது. அப்படி ஒரு எண்ணம் எனக்கு வந்தால் என்னால் விளையாடவே முடியாது.

ஒருவேளை அணி நிர்வாகம் என்னை உலகக் கோப்பை இந்திய அணியில் தேர்ந்தெடுக்காவிட்டால், அது அவர்களுடைய முடிவு. அதற்காக என்னால் எதுவும் செய்ய முடியாது. எனது இடத்திற்காக நான் விளையாட வேண்டும் என்று நினைப்பது தப்பு. நான் அணிக்காக விளையாடிவிட்டு போகிறேன் அவ்வளவுதான்!” என்று கூறியிருக்கிறார்!