இந்திய கிரிக்கெட்

வெறும் 20 வயது.. அபிஷேக் ஷர்மாவுக்கு போட்டி.. ஆஸி டி20-ல் களம் இறக்கும் கூப்பர் கானோலி யார்?.. சுவாரசிய தகவல்கள்

ஆஸ்திரேலியா அணி அடுத்து ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கிறது. இதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் எதிர்காலம் கருதி 20 வயதான கூப்பர் கானோலி டி20 ஆஸ்திரேலியா அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரையில் ஒரு பிரதான சுழல் பந்துவீச்சாளரான ஆடம் ஜாம்பாவை வைத்து வெள்ளைப் பந்து தொடர்களை சந்தித்து வருகிறது. மேலும் மேக்ஸ்வெல் பகுதிநேர ஆப் ஸ்பின்னர் ஆக இருந்து வருகிறார். வழக்கமான ஆடுகளங்களுக்கு இந்த ஜோடி போதுமானது.

அதே சமயத்தில் இந்தியா போன்ற ஸ்பின்னுக்கு சாதகமான ஆடுகளத்தில் கூடுதலாக இடதுகை சுழல் பகுதிநேர சுழல் பந்துவீச்சாளர் இருப்பதும் அவசியமாகிறது. இதன் காரணமாகவே இடதுகை பேட்டிங் மற்றும் இடதுகை சுழல் பந்து வீச்சுக்காக அபிஷேக் சர்மாவுக்கு இந்திய அணியில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. தற்பொழுது இதே பாணியில் இடதுகை பேட்டிங் மற்றும் இடதுகை பகுதிநேர சுழல் பந்துவீச்சு என செயல்படும் கூப்பர் கானோலியை ஆஸ்திரேலியா கிரிக்கெட் எதிர்காலத்திற்காக உள்ளே கொண்டு வந்திருக்கிறது.

20 வயதான கூப்பர் கானோலி கடந்த இரண்டு அண்டர் 19 உலகக்கோப்பையிலும் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடினார். மேலும் 2022 ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணியை கேப்டனாக வழி நடத்தினார். அந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்தை பிடித்தது.

- Advertisement -

இவர் ஒரே ஒரு உள்நாட்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி 108 ரன்கள் எடுத்திருக்கிறார். உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட்டில் நான்கு போட்டிகளில் விளையாடிய 68 ரன்கள் மட்டுமே எடுத்தாலும் மூன்று விக்கெட்டுகளும் கைபற்றியிருக்கிறார். அதே சமயத்தில் ஆஸ்திரேலியா பிபிஎல் டி20 லீக்கில் 15 போட்டிகளில் விளையாடி 28.25 ரன் ஆவரேஜில் 226 ரன்கள் எடுத்திருக்கிறார். மிகக் குறிப்பாக இவரது ஸ்ட்ரைக் ரேட் 146 என மிகச் சிறப்பாக இருக்கிறது. மேலும் வந்து வீச்சில் ஒரு ஓவருக்கு ஏழு ரன்கள் மட்டும் விட்டு தந்து ஆறு விக்கெட்டும் கைப்பற்றி இருக்கிறார்.

இதையும் படிங்க : இந்திய பேட்டிங் கோச்சா சொல்றேன்.. கோலி ரோகித் இடத்த இந்த வீரர்கள் நிரப்புவாங்க – விக்ரம் ரத்தோர் பேட்டி

இவரது தந்தை உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர் மேலும் இவருக்கு பயிற்சியாளராகவும் இருக்கிறார். அடுத்த டி20 உலக கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடப்பதால் பேட்டிங் செய்யக்கூடிய பகுதிநேர சுழல் பந்துவீச்சாளர்கள் தேவையாக இருக்கிறது. இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கும் பொழுதே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வழக்கம் போல் அதிரடியாக இவரை கொண்டு வந்திருக்கிறது. இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா துவக்க வீரராக வர, இவரை ஆஸ்திரேலியா பினிஷிங் இடத்தில் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

- Advertisement -
Published by

Recent Posts