தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஓய்வு பெற்று விட்டார்கள். மேற்கொண்டு அவர்கள் மற்ற வடிவங்களில் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்கள்? என்று தெரியாது. எனவே அவர்களுக்கான மாற்று வீரர்களை உருவாக்குவது அவசியம். இந்த நிலையில் ராகுல் டிராவிட் கூட்டணியில் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த விக்ரம் ரத்தோர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடத்தை யார் நிரப்புவார்கள்? என்று கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய அணியில் துணைப் பயிற்சியாளர் குழு முழுமையாகக் கலைக்கப்பட்டிருக்கிறது. தலைமை பயிற்சியாளர் கம்பீர் விரும்பக்கூடிய ஆட்கள் துணைப் பயிற்சியாளர்களாக வருவார்கள். எனவே இந்திய அணியின் எல்லாவித துணை பயிற்சிகளும் தற்போது பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்திய அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக இருந்த விக்ரம் ரத்தோர் இந்திய அணியின் பேட்டிங் பலம் எப்படி இருக்கிறது? மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா முழுமையாக ஓய்வு பெற்றால் அந்த இடத்தை யார் நிரப்ப முடியும்? என்பது குறித்து வெளிப்படையாகவே பேசி இருக்கிறார்.
இதுகுறித்து விக்ரம் ரத்தோர் கூறும் பொழுது “விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற திறமையான வீரர்களின் இடத்தை உடனடியாக மாற்றுவது எளிதான வேலை கிடையாது. சமீபத்தில் முடிந்த ஜிம்பாவேவுக்கு எதிரான டி20 தொடரில் எதிர்கால இந்திய டி20 அணி எப்படி இருக்கும் என்கின்ற ஒரு பிக்சர் கிடைத்திருக்கிறது.ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு இந்த நிலை வருவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.
எனக்கு இது குறித்து பெரிய கவலை கிடையாது. இந்திய கிரிக்கெட் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. இந்த அமைப்பில் இருந்து நிறைய திறமையான வீரர்கள் வெளியில் வருகிறார்கள். நாம் மாற்றத்தை படிப்படியாக கொண்டு வர வேண்டும்.இதற்குள் கில், ஜெய்ஸ்வால், துருவ் ஜுரல், ரிஷப் பண்ட் ஆகியோர் தங்களை நிலைநிறுத்திக் கொள்வார்கள். ஒருநாள் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹர்திக் பாண்டியா, கேஎல்.ராகுல் ஆகியோர் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : ஆர்சிபி ஒரே டீம் கிடையாது.. அங்க உள் நிலைமை இப்படி மோசமா இருக்கும்.. அனுபவத்துல சொல்றேன் – பார்த்தீவ் படேல் பேச்சு
பல அற்புதமான வீரர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இந்திய அணிக்கு நீண்ட காலத்திற்கு விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார்கள். அவர்கள் பல ஆண்டுகள் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் முதுகெலும்பாக இருக்கப் போகிறார்கள் ” என்று கூறியிருக்கிறார்.