ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளோடு இடம்பெறும் மற்றொரு அணி எது?

0
88
Indvspak

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு முக்கியமான சர்வதேச கிரிக்கெட் தொடருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறலாம். அந்தத் தொடர் வருகின்ற இருபத்தி ஏழாம் தேதி யுனைடெட் அரபு எமிரேட்டில் துவங்கும் ஆசியக் கோப்பை தொடராகும்!

இந்தத் தொடருக்கு அதிக அளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகி இருப்பதற்கு முக்கிய காரணம், இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன. மேலும் இந்த ஒரே தொடரில் மூன்று முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கும் படி போட்டி அமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சில பல ஆண்டுகளாக இருநாடுகளுக்கு இடையேயான சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடத்தப்படுவதில்லை. இதனால் இரு நாடுகளும் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே நேருக்குநேர் மோதி விளையாடு வந்தன. இருநாடுகள் மோதுவதை பார்க்க எப்பொழுதுமே கிரிக்கெட் உலகில் பெரிய வரவேற்பு ரசிகர்களிடையே இருக்கும். தற்போது மீண்டும் அந்த வாய்ப்பு கிடைத்து இருப்பதால் இந்த தொடருக்கு உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

மேலும் கடந்த முறை அரபு எமிரேட்டில் நடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியோடு 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து இருந்தது. இதற்கு இந்த முறை ஆசிய கோப்பையில் இந்திய அணி பதிலடி தருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

இந்தியா பாகிஸ்தான் இலங்கை பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் என மொத்தம் ஐந்து அணிகள் இந்தத் தொடரில் விளையாட நேரடியாக தேர்வாகின. ஆறாவதாக ஒரு அணி தகுதிச்சுற்றுகளின் மூலம் தேர்வு செய்யப்பட இருந்தது. இதற்காக போட்டியை நடத்தும் யுனைடெட் அரபு எமிரேடும் இந்த தகுதிச்சுற்றில் இருந்தது. ஒரு குழுவில் இலங்கை பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் இடம் பெற்றிருந்தன. இன்னொரு பிரிவில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இருக்கின்றன. புறாவுக்காக இடம்பெறும் அணிக்காக தகுதி சுற்று போட்டிகள் தற்போது யுனைடெட் அரபு எமிரேட்டில் நடந்துவந்தன.

- Advertisement -

நேற்று ஒரு மிக முக்கியமான தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஹாங்காங் அணியும் யுனைடெட் அரபு எமிரேட் அணியும் மோதிக்கொண்டன. இதில் முதலில் பேட் செய்த யுனைடெட் அரபு எமிரேட் அணி 147 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஹாங்காங் அணி ஒரு ஓவர்கள் மீதம் இருக்கையில் 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதோடு, ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ள குழுவில் மூன்றாவது அணியாக நுழைந்தது. கடந்த முறை நடைபெற்ற ஆசிய கோப்பையிலும் ஆங்காங்கே தகுதி சுற்றில் வென்று கோப்பையில் நுழைந்திருந்தது குறிப்பிடத்தக்கது!

ஆகஸ்டு இருபத்தி ஏழாம் தேதி துவங்கும் இந்த தொடரில் அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் மோதிக் கொள்ள இருக்கின்றன!