எதே?.. “வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை இந்திய ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட வைங்க” – ஐடியா கொடுத்த இந்திய முன்னாள் வீரர்!

0
353
Indvswi2023

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதலில் விளையாடிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என கைப்பற்றி இருக்கிறது. இரண்டாவது போட்டி மழையின் காரணமாக டிராவில் முடிந்தது!

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சில் ஓரளவுக்கு போராட்டத்தை வெளிப்படுத்தினாலும் பேட்டிங்கில் எந்தவித போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல் வெகு எளிதாக இந்திய அணியிடம் சரணடைந்தது.

- Advertisement -

இரண்டாவது போட்டியில் பேட்டிங் செய்ய கொஞ்சம் சாதகமான ஆடுகளத்தில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் மிகவும் மந்தமான முறையில் விளையாடி 2.20 என்ற குறைந்த ரன் ரேட்டில் அணியை வழிநடத்தினார்கள். இது டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்கும் ரசிகர்களை மிகவும் வெறுப்பேற்றும் வகையில் இருந்தது.

மேலும் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணி ஜிம்பாவே நாட்டில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை காண தகுதி சுற்றில் தோற்று வெளியேறி வந்திருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தகுதி சுற்றிலும் தோற்று வெளியேறி வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நாளுக்கு நாள் பெய்து தற்போது அதல பாதாள வீழ்ச்சியில் கிடக்கிறது. முன்பு ஓரளவுக்கு ஒன்றிரண்டு வீரர்கள் தரமான போட்டியை வெளிப்படுத்தக்கூடியவர்களாக இருந்தார்கள். சிலர் அதை அதிரடியாக செய்தார்கள் சிலர் அதை புத்திசாலித்தனமாக செய்தார்கள்.

- Advertisement -

தற்பொழுது வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டில் அப்படி எந்தவிதமான போராட்டத்தையும் வீரர்களிடமிருந்து பார்க்க முடியவில்லை. இவர்களுடன் பெரிய அணிகள் விளையாடும் பொழுது பெரிய அணிகளின் ரசிகர்கள் அந்த போட்டிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தீவுக் கூட்டங்களில் கிரிக்கெட் வேகமாக அழிந்து வருகிறது என்றே சொல்லலாம்.

தற்பொழுது அழிந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் காப்பாற்ற இந்திய முன்னாள் வீரர் தீப் தாஸ் குப்தா கூறுகையில் “சிவப்பு பந்து கிரிக்கெட்டில் திறன் இருக்கிறது. திறமை இருக்கிறது. இளையவர்கள் நிறைய வருவதை பார்க்கிறோம். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் அணியை வெற்றி பெற செய்ய, போட்டித் தன்மையை அடையச் செய்ய, அவர்கள் உண்மையில் செய்ய வேண்டியது என்னவென்றால், அவர்கள் மேலும் மேலும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும்.

தரமான போட்டியை வெளிப்படுத்தக்கூடிய நான்கு ஐந்து அணிகளுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் சில சமயங்களில் அது சாத்தியமும் இல்லை. நடைமுறையிலும் இல்லை. இதனால் இதை சரி செய்வதற்கு என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது. அது என்னவென்றால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் சில வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை இந்திய ரஞ்சி கிரிக்கெட்டில் பிசிசிஐ விளையாட அனுமதிக்க வேண்டும் என்பதே அது.

இந்தியாவில் அக்டோபர் நவம்பர் இரண்டு மாதங்களில் நடக்கும் உள்நாட்டு கிரிக்கெட்டில், வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த திறமை இருக்க கூடிய நான்கு ஐந்து வீரர்களை இங்கு விளையாட வைக்க வேண்டும். நம்மிடம் ரஞ்சி கிரிக்கெட்டில் 38 அணிகள் இருக்கின்றன. எனவே வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த 4, 5 வீரர்களை உள்வாங்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதான ஒன்று. இப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை காப்பாற்ற முடியும்!” என்று கூறியிருக்கிறார்!