கேப்டன்கள் கூட்டத்தில் எங்கே ரோகித் சர்மா? ஏன் வரவில்லை? என்ன ஆயிற்று?

0
652
IPL 2023

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடர் நாளை அகமதாபாத் மைதானத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் அணிக்கும் அதற்கும் முன்னாள் ஆண்டு சாம்பியன் சென்னை அணிக்கும் இடையே துவங்கி நடைபெற இருக்கிறது!

ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்கள் மற்றும் பிற கிரிக்கெட் வாரியங்கள் நடத்தும் பிரான்சிஸைஸ் டி20 கிரிக்கெட் தொடர்களை, வீரர்களுக்கான சம்பளம் மற்றும் பாதுகாப்பு இதர வசதிகள், போட்டி தரம் மற்றும் மைதான ஏற்பாடுகள் என்று எல்லாவற்றிலும் மிஞ்சி ஐபிஎல் தொடர் இன்று மிகப்பெரிய பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய விளையாட்டு தொடராக நிற்கிறது!

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியம் உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்துவதற்கான பொருளாதார பலத்தை ஐபிஎல் தொடர் தருகிறது. மெல்ல மெல்ல உலக கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கைப்பிடிக்குள் அடங்கி கொண்டே வருகிறது. இன்னும் ஐந்து வருடங்களில் ஐபிஎல் தொடர் நடத்தப்படும் நாட்களில் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அந்த நாட்களில் பெரிய அணிகள் விளையாடும் எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடக்காத அளவுக்கு மாற இருக்கிறது.

2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தற்பொழுது நாளை பதினாறாவது சீசனில் அடி எடுத்து வைக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான கேப்டன்கள் அறிமுகம் மற்றும் கேப்டன்கள் மீட்டிங், போட்டோ ஷூட்டிங் இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடருக்கு முன்பாக இந்த சம்பிரதாய நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் இதற்கான நிகழ்வுகள் அரங்கேறி அதற்கான போட்டோக்கள் வெளியாகின. ஆனால் கேப்டன்களுக்கான அந்தக் குழு புகைப்படத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் புகைப்படம் காணவில்லை.

- Advertisement -

சமூக வலைதளங்களில் ரோஹித் சர்மா எங்கே என்று பரவலாக கேள்விகள் மும்பை ரசிகர்களை தாண்டி மற்ற அணி ரசிகர்களாலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு தெளிவு பெறும் விதமாக ட்விட்டரில் மிக நம்பத் தகுந்த முகவரிகளில் ரோகித் சர்மாவுக்கு உடல்நலம் சரியில்லை என்றும் அதனால் அகமதாபாத்துக்கு அவர் பயணிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று மும்பை அணியின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதன் புதிய பயிற்சியாளர் மார்க் பவுச்சர் பேசும்பொழுது, அடுத்து இந்தியா அணிக்கு வர இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு சில பல ஆட்டங்களில் ஓய்வளிக்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சீசனில் மும்பை அணி மிகவும் மோசமான நிலையை அடைந்திருந்தது. இப்பொழுது தொடர் துவங்குவதற்கு அருகில் கேப்டன் உடல்நிலை சரியில்லை என்பது ரசிகர்களை கவலை அடைய வைக்கும் செய்தியாக இருக்கிறது. தகவலுக்கான ட்விட்டர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!