கோலி, ரோஹித் என 3 முக்கிய இந்திய வீரர்கள் தேவையான நேரத்தில் அவுட் ஆகிவிடுவர் – கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள கபில் தேவ்

0
100
Rohit Sharma Virat Kohli and Kapil Dev

இன்றைய இந்திய கிரிக்கெட்டின் பெரிய வளர்சிக்குப் பின்னால் தனியொரு மனிதனாக கபில்தேவ் என்கின்ற வீரரின் பெயர் பெரிதாய் இருக்கிறது. ஆனால் இதுகுறித்தெல்லாம் முக்கியமான யாரும் பெரிதாய் பேசுவதில்லை. இப்படிப் பேசாததிற்குப் பின்னால் நிறைய காரணங்கள் உண்டு.

ஹரியானா சிங்கம் என்று அழைக்கப்படும் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ஆம் உலகக் கோப்பையைக் கைப்பற்றிய பிறகுதான், இந்திய கிரிக்கெட் மின்சாரம் சென்று சேராத கிராமங்களுக்கும் சென்று சேர்ந்தது.

- Advertisement -

1983 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதில் ஒரு வீரராகவும் கேப்டனாகவும் கபில்தேவின் பங்கு மிகப்பெரியது. நம்பிக்கை இல்லாதிருந்த வீரர்களுக்கு நம்பிக்கையாய் களத்திற்கு வெளியே மட்டும் இல்லாது களத்திற்கு உள்ளேயும் இருந்தார். ஜிம்பாப்பே உடனான காலிறுதி போட்டியில் தனியொருவராக நின்று அடித்த 175 ரன் சதமே உதாரணம். வேகப்பந்து வீச்சு என்றால் அந்தக் காலத்தில் இந்திய அணி சைபர்தான். ஆனால் அப்போதே தனது ஸ்விங் பாஸ்ட் பவுலிங் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை அப்போது எடுத்திருந்த நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லி சாதனையை உடைத்தவர் கபில்தேவ். இப்படி பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய ஆல்ரவுண்டர். இப்போது வரை இவரைப் போல ஒரு ஆல்ரவுண்டர் இந்திய அணிக்கு அமையவில்லை என்பதே உண்மை!

இன்று ஐ.பி.எல் தொடர் மூலமாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயிரக்கணக்கான கோடிகளைச் சுலபமாக பாக்கெட்டில் திணித்துக் கொள்வதற்கு, அன்று ஐ.எஸ்.எல் என்று ஆரம்பித்து விதைபோட்டவர் கபில்தேவ். ஆனால் திடீரென விழித்துக்கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம் பலவாறான தடைகளைக் கொண்டுவந்து, கபில்தேவின் ஐ.எஸ்.எல்-லை செயல் இழக்க வைத்தது.

இப்படியான பெருமைகளுக்கு உரிய கபில்தேவ் விராட்கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோரைப் பற்றி முக்கியமான ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் “எப்பொழுது ரன் தேவைப்படுகிறதோ அப்பொழுது இவர்கள் அவுட் ஆகிவிடுகிறார்கள். எப்பொழுது ஒரு இன்னிங்ஸில் அடித்து ஆட வேண்டுமோ அப்பொழுதும் அவுட் ஆகிவிடுகிறார்கள்” என்று குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார்!

- Advertisement -