141 ஆண்டுகால ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 0-2 என இருந்த அணி.. 3-2 என தொடரை கைப்பற்றிய வரலாறு உண்டா? –

0
1223

ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்றில் முதல் 2 போட்டிகளின் முடிவில் 0-2 என இருந்த அணி 3-2 என தொடரை கைப்பற்றிய வரலாற்று உண்டா என்பதை பின்வருமாறு காண்போம்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆசஸ் தொடரில், முதல் இரண்டு போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலையில் இருக்கிறது.

- Advertisement -

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பரபரப்பாக நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி கடைசி வரை எடுத்துச் சென்று இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அண்மையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்டில் மீண்டும் ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-0 என முன்னிலையிலும் இருக்கிறது.

மீதம் 3 போட்டிகள் இருப்பதால் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை கைப்பற்றி விடும் என பல்வேறு கணிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முடிவில், “எங்களது கவனம் எல்லாம் மீதம் இருக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் தான் இருக்கிறது. அதில் வெற்றி பெற்று வரலாறு படைப்போம்.” என்று இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் ப்ரண்டன் மெக்கல்லம் பேசியுள்ளார்.

கிட்டத்தட்ட 141 ஆண்டுகால ஆஷஸ் கிரிக்கெட் வரலாற்றில் இம்முறை நடைபெற்று வரும் டெஸ்ட் தொடருக்கு முன்பாக 72 முறை ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்றிருக்கிறது. இதுவரை ஆஸ்திரேலியா அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

- Advertisement -

இதற்கு முன்னர் 1936-37 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வென்று 2-0 என வலுவான முன்னிலை பெற்றிருந்தது. டான் பிராட்மேன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்டிலும் இங்கிலாந்து அணியை தவிடுபொடியாக்கி தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளுடன் 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இத்தனை ஆண்டுகால ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற அணி தோல்வியை சந்தித்தது அதுவே முதல் முறையாகும்.

21ம் நூற்றாண்டில் 7 முறை இதுபோன்று 2-0 என முன்னிலை பெறப்பட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலியா அணி ஆறு முறையும் இங்கிலாந்து அணி ஒரு முறையும்(2013) செய்துள்ளன. ஏழு முறையும் முன்னிலை பெற்ற அணியே வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய வரலாறு நீடிக்கிறது.

ஒருமுறை கூட முன்னிலை பெற்ற அணி தொடரை டிராவில் முடித்த வரலாறோ, தொடரை இழந்த வரலாறோ இல்லை. ஆகையால் இம்முறை வலுவான முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றுவதற்கான கணிப்புகள் அதிக அளவில் இருக்கின்றன.

அதேநேரம் இங்கிலாந்து அணி வித்தியாசமான அணுகுமுறையுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருவதால், அதிர்ச்சிகரமான பல விஷயங்கள் நடைபெற்று இங்கிலாந்து அணியும் தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவர்களது ரசிகர்கள் நம்புகின்றன.

வருகிற ஜூலை 6 ஆம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. அதன் முடிவுகள் சொல்லிவிடும் எந்த அணைக்கு இம்முறை ஆஷஸ் கோப்பை செல்கிறது என்று. அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்!