உ.கோ இந்திய அணி மாற்றம் கடைசிநாள் எப்போது?.. யாரார் உள்ளே வெளியே?.. அஸ்வின் வருவாரா? – முழு விபரம்..!

0
5051
Shardul

இந்தியாவில் அடுத்த மாதம் அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கி நவம்பர் மாதம் 19ஆம் தேதி வரை ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த முறை நடக்க இருக்கும் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் முழுமையாக முதல்முறையாக நடத்தப்பட இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடராக அமைகிறது.

இந்த உலகக் கோப்பைக்கு முதல் அணியை அறிவிக்கும் தேதியாக செப்டம்பர் 5ஆம் தேதியை ஐசிசி நிர்ணயித்து இருந்தது. அனைத்து அணிகளும் இந்த தேதிக்குள் தங்களது அணியை வெளியிட்டு இருந்தார்கள். மேலும் அறிவிக்கப்பட்ட அந்த உலகக்கோப்பை அணியில் ஏதாவது மாற்றங்கள் செய்வதற்கான கடைசி நாளாக செப்டம்பர் 28ஆம் தேதி ஐசிசி கொடுத்திருந்தது.

- Advertisement -

இந்த நாளுக்குள் எல்லா அணிகளும் தங்கள் உலகக்கோப்பை 15 பேர் கொண்ட அணியில் மாற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு மேல் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் வீரர்கள் தனிப்பட்ட காரணத்திற்காக விலகினாலோ, இல்லை காயத்தால் மருத்துவ சான்றிதழ் உடன்தான் விலக முடியும்.

இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடுகிறது. இந்தத் தொடரின் கடைசி போட்டி நாளை மறுநாள் செப்டம்பர் 27ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் நடக்கிறது. இதற்கு அடுத்த நாள் உலகக் கோப்பைக்கு இறுதியான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அதுதான் கடைசி நாள். மேலும் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் மாற்றம் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இடதுகை சுழற் பந்துவீச்சாளர் அக்சர் படேல் காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் இடம் பெறவில்லை. மூன்றாவது போட்டியில் அவரது பெயர் இருந்தது. ஆனால் தற்போது அவரது காயம் குணமடையாததால், ஆஸ்திரேலிய தொடரில் அவர் ரூல்டு அவுட் ஆகி இருக்கிறார். மேலும் உலகக் கோப்பைக்கு அவர் காயம் குணமடைந்து உடல் தகுதி பெறுவாரா? என்பது தெரியவில்லை.

- Advertisement -

மேலும் சர்துல் தாகூர் செயல்பாடு பந்துவீச்சில் பெரிய அணிகளுக்கு எதிராகச் சிறப்பாக இல்லை. அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பேட்டிங்கில் பெரிய ரன்களும் அடிப்பதில்லை. அவருடைய இடத்திற்கு முகமது சமியே தாராளமாக விளையாடலாம் என்கின்ற கருத்து நிலவுகிறது.

அடுத்து அக்சர் இடத்தில் பரிசோதிப்பதற்காக ஆஸ்திரேலியா தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே அவர் உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றால் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. அதே சமயத்தில் வாஷிங்டன் சுந்தருக்கு இதுவரை வாய்ப்பு தரப்படவில்லை. எனவே உலகக்கோப்பையில் அவருக்கான வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகிறது.

தற்போது உள்ள நிலையில் அக்சர் படேலுக்கு காயம் சரியானால், அவர் அணிக்குள் நேரடியாக வருவார் என்றும், சர்துல் தாகூர் இடத்தில் அஸ்வின் இடம்பெறுவார் என்றும் தெரிகிறது. ஒருவேளை அக்சர் வராவிட்டாலும் கூட, அவரது இடத்தில் பிரசித் கிருஷ்ணா மாதிரியான ஒரு முழுமையான வேகப்பந்துவீச்சாளரை உள்ளே கொண்டு வரவும் வாய்ப்பு இருக்கிறது. தற்போது சர்துல் தாகூர் இடம்தான் சிக்கலில் இருக்கிறது. மேலும் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பே கிடையாது என்பதும் உறுதியாகத் தெரிகிறது!