“கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எப்பொழுது? ” – முதல்முறையாக மௌனம் கலைத்த ரோகித் சர்மா!

0
8248
Rohit

2021 ஆம் ஆண்டு இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகிக் கொள்வதாக அறிவிக்க, அவருக்கு அடுத்து முதலில் டி20 அணிக்கு கேப்டனாக வந்த ரோகித் சர்மா, பிறகு மூன்று வடிவ இந்திய கிரிக்கெட் அணிகளுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதுவரை டி20 மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என இரண்டு வடிவத்திற்கு கேப்டனாக உலகக்கோப்பையை சந்தித்துள்ள ரோஹித் சர்மா, ஒன்றில் அரையிறுதி மற்றும் மற்றொன்றில் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறார்.

- Advertisement -

தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் அவரது தலைமையின் கீழான இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அரை இறுதி போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.

நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் அரை இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடி இருக்கிறது.

தற்பொழுது 36 வயதான இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 2007 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் இந்திய அணிக்கு முதல் முறையாக அறிமுகமானார். அவருடைய கிரிக்கெட் பயணம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 16 ஆண்டுகளாக தொடர்ந்து வந்திருக்கிறது.

- Advertisement -

மேற்கொண்டு ரோஹித் சர்மா இன்னும் ஒரு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாட முடியாது என்பது தெளிவாகவே தெரிந்த விஷயம். எனவே அவரும் விளையாடுவதற்கு விருப்பம் என்கின்ற அளவில் எதுவும் இதுவரை கூறியதும் இல்லை.

மேலும் அடுத்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலக கோப்பை இருக்கிறது. அதற்கடுத்த வருடம் 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி இருக்கிறது. இந்த இரண்டு ஐசிசி தொடர்களையும் சந்தித்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்கலாம் என்று தெரிகிறது.

தற்பொழுது ஓய்வு குறித்து ரோஹித் சர்மாவிடம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்ட பொழுது “எனது கிரிக்கெட் பயணத்தை பற்றி சிந்திப்பதற்கான நேரம் இது கிடையாது. அனேகமாக நான் உலகக் கோப்பை இறுதிப்போட்டி முடிந்ததற்குப் பிறகுதான் இது குறித்து சிந்திப்பேன்.

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். இந்த ஒரு வாரத்தின் முக்கியத்துவம் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். நான் எனது மனநிலையை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை!” என்று கூறி இருக்கிறார். அதே சமயத்தில் ஓய்வு குறித்து உலகக் கோப்பை முடிந்து சிந்திப்பேன் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது!