பாகிஸ்தான் இந்தியாவுக்கு உலக கோப்பை ஆட வரலனா என்ன நடக்கும்? வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜாக்பாட்?

0
4129

இந்தியா பாகிஸ்தான் போட்டிகளுக்கு எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. அதுவும் உலக கோப்பை போட்டி என்றால் கேள்வியே தேவையில்லை. இந்த வருடம் ஓடிஐ உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது அதில் அக்டோபர் 15 இந்தியா மற்றும் பாகிஸ்தான் அகமதாபாத் மைதானத்தில் மோதுகின்றன. அகமதாபாத்தில் இப்போதே அக்டோபர் 15 தங்கும் விடுதிகளின் முன்பதிவு சூடு பிடித்து வருகிறது.

சில அரசியல் காரணமாக இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பையில் மட்டுமே சாத்தியப்படுகின்றன. ஆகஸ்டில் நடைபெறும் ஆசிய கோப்பை 2023 பாகிஸ்தானில் மட்டும் நடைபெறுவதாக இருந்தது, ஆனால் இந்தியா பாகிஸ்தானில் விளையாட முடியாது என்பதால் ஹைபிரிட் என்னும் ஒரு மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது ஆசியக் கோப்பை பாகிஸ்தானில் மட்டுமில்லாமல் ஸ்ரீலங்காவிலும் நடைபெறும். இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் ஸ்ரீலங்காவில் நடைபெறும்.

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை பாகிஸ்தான் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.ஐசிசி தரப்பில் இருந்து உலக கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டாலும், பாகிஸ்தான் அணி பங்கேற்பு குறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகித்திடமிருந்து வெளியிடப்படவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் பாகிஸ்தான் அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றனர்.

ஒருவேளை பாகிஸ்தான் இந்தியாவுக்கு வர முடியாமல் உலக கோப்பையில் பங்கேற்க முடியாமல் போனால் என்ன ஆகும் என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது. இது குறித்து டைம்ஸ் நவ் ஐசிசி நபரிடம் எழுப்பிய கேள்விக்கு அவர்கள் பதில் வழங்கியுள்ளார்.

பாகிஸ்தான் வரவில்லை என்றால் என்ன நடக்கும்?

பாகிஸ்தான் இந்தியாவுக்கு வர மறுத்தாலும் வர முடியாமல் போனாலும் பாகிஸ்தான் அணிக்கு பதிலாக பத்தாவது அணியாக, உலக கோப்பை தகுதி சுற்றில் விளையாடும் அணிகளில் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடம் பிடிக்கும் அணி தகுதி பெறும் என்று ஐசிசி நபர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. ஏனெனில் இலங்கை மற்றும் ஜிம்பாவே புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருப்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பைக்கு தகுதி பெறுவது மிகவும் கேள்வி குறையாக அமைந்துள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் விளையாடவில்லை என்றால் இது இது கண்டிப்பாக வெஸ்ட் இண்டீஸ்க்கு சாதகமாக அமையும். ஆனால் கண்டிப்பாக பாகிஸ்தான் உலக கோப்பையில் பங்குபெறும் என்பதுதான் அனைவரின் நம்பிக்கையாக உள்ளது.