இது என்ன குப்பை? டிரைவிங் லைசென்ஸ வீட்ல வைங்க – இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை விளாசிய ரவி சாஸ்திரி!

0
1061
Ravi

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் உலக அளவில் கொடிகட்டி பறந்தது விராட் கோலியின் தலைமையின்த்திலும் ரவி சாஸ்திரி பயிற்சியின் கீழும்தான்!

இவர்களின் கூட்டணிதான் இந்திய வேகப்பந்து வீச்சு துறைக்கு கூர்த்தீட்டி இந்தியாவுக்கு வெளியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பிடும்படியான வெற்றிகளை குவித்தது!

- Advertisement -

நாளை துவங்க இருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்தக் கூட்டணி இருமுறை ஆஸ்திரேலியாவில் வைத்து ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி கைப்பற்றி மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது. தற்பொழுது பார்டர் கவாஸ்கர் டிராபி இந்திய அணியின் கைகளில் இருப்பதற்கு இந்த கூட்டணியே முக்கியக் காரணம்!

இப்படியானதொரு எழுச்சிக்கு 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா தொடரின் போது அழுத்தமான புள்ளி வைக்கப்பட்டது. அப்பொழுது இந்திய அணிக்குள் பும்ரா வந்தார். அங்கிருந்து புதிய முயற்சிகளும் ஆக்ரோச தாக்குதல்களும் ஆரம்பித்தது. அந்த சுற்றுப் பயணத்தில் நடந்த ஒரு சுவாரசியமான தகவலை அப்போது இந்திய அணிக்கு பீல்டிங் பயிற்சியாளராக இருந்த ஸ்ரீதர் தற்போது தனது புத்தகத்தில் வெளியிட்டிருக்கிறார்.

2018 தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி தென்னாபிரிக்காவின் முதல் மூன்று விக்கெட்டுகளை 12 ரண்களில் வீழ்த்தி இருந்தது. ஆனால் மேற்கொண்டு அவர்களை கட்டுப்படுத்தாமல் 280+ ரண்களை விட்டுக் கொடுத்தது. இதில் கோபமடைந்த ரவி சாஸ்திரி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட்டை சேர்ந்த சமி, பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா ஆகியோரை வெளுத்துக்கட்டி இருக்கிறார்.

- Advertisement -

இது சம்பந்தமாக ஸ்ரீதர் கூறும்பொழுது
” அன்று மாலை ரவி சாஸ்திரி இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை அழைத்தார். அவர் அவர்களிடம் ‘இது என்ன குப்பை? நீங்கள் ஆட்டத்தின் நடுவில் டிரைவ் ஆடுவதற்கு சுலபமாக பந்துகளை வீசிக் கொண்டிருந்தீர்கள். அதைப் பார்த்து எனக்கு உடம்பே சரியில்லாமல் போய்விட்டது. நீங்கள் சாலைகளில் மட்டும்தான் டிரைவ் செய்ய வேண்டும் ஆடுகளத்தில் கிடையாது. நீங்கள் அதில் சிக்கிக் கொள்ளாதீர்கள்!” என்றார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” அடுத்த நாள் காலை நாங்கள் பந்து வீச்சாளர்களிடம் ‘ உங்கள் டிரைவிங் லைசன்சை உங்கள் வீட்டிலேயே வைத்து விடுங்கள்’ என்று கூறிவிட்டோம். தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் மூக்குக்கு கீழே எந்த பந்தையும் பார்க்க கூடாது என்று சொன்னோம். அதன் பிறகு இந்திய அணியின் பந்து வீச்சு தாக்குதல் வேறு மாதிரியாக மாறியது. நாங்கள் இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணியை 130 ரன்களுக்கு சுருட்டினோம்.” என்று கூறியிருக்கிறார்!