“உலக கோப்பை இறுதி போட்டியில் இதுக்கு மேல என்ன வேணும்!” – ஸ்டார்க் உற்சாகமான பேட்டி!

0
1187
Cummins

இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் முதலில் தங்கள் அணி பந்துவீசும் என அறிவித்தார். ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் அவர் இப்படியான முடிவுக்கு வந்திருக்கிறார். மேலும் இன்றைய ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்தது

- Advertisement -

இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு ககில் நான்கு ரன்கள் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். ஆனால் ரோஹித் சர்மா வழக்கம் போல் மிகச் சிறப்பான துவக்கம் தந்தார். ஆனாலும் அதிரடியாக 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து வந்த ஸ்ரேயாஸ் நான்கு ரன்னில் வெளியேற நெருக்கடி உருவானது.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் நிதானமாகவும் பொறுப்பாகவும் விளையாடி அணியை மீட்டுக் கொண்டு வந்தார்கள்.

ஆனால் விராட் கோலி 54 ரன்களில் வெளியேற, போராடிய கே எல் ராகுல் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்த இந்திய அணிக்கு சொல்லிக் கொள்ளும்படி யாரும் விளையாடவில்லை. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. இன்றைய போட்டியில் ஸ்டார்க் பத்து ஓவர்களுக்கு 55 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

போட்டிக்கு பிறகு பேசிய ஸ்டார்க் கூறும் பொழுது “நீங்கள் எப்பொழுதும் ஒரு திட்டத்தை வைத்திருக்கலாம். ஆனால் இன்று நாங்கள் செயல்பட்ட விதம் மிகவும் அருமையாக இருக்கிறது. இப்போது பேட் மூலம் நாங்கள் எங்கள் வேலையை செய்ய வேண்டும்.

எங்களது வேகப்பந்துவீச்சாளர்கள் சில வித்தியாசமான முயற்சிகளை செய்து பார்த்தார்கள். கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்களுக்கு கடைசியில் பந்து ரிவர்ஸ் ஆனது.

இங்கிலாந்துக்கு எதிராக நாங்கள் இரண்டாவதாக பந்து வீசிய பொழுது இங்கு பனி வந்தது. இப்பொழுதும் வரும் என்று நம்புகிறேன். இது பேட்டிங் செய்ய எளிமையான ஆடுகளம் கிடையாது. ஆனால் ஒரு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இதற்கு மேல் என்ன கேட்க முடியும்!” என்று கூறியிருக்கிறார்!