ரொம்ப நாளா நடக்குது இதுக்கு என்னதான் தீர்வு? – இந்திய பேட்ஸ்மேன்களின் பிரச்சனைக்கு தீர்வு கூறிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் துவக்க வீரர்!

0
95

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வைத்து நடைபெற இருக்கிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் கடுமையாக போராடும். மேலும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் உலக கோப்பை போட்டிகளுக்கும் இந்தப் போட்டி ஒரு நல்ல பயிற்சி போட்டியாக அமையும்.

- Advertisement -

முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியா அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிச்சல் ஸ்டார்க்கின் வேகத்தை சமாளிக்க முடியாமல் ஆட்டம் இழந்து வெளியேறினர்.

முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஸ்டார்க் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் இந்த தொடரில் வீழ்த்தியிருக்கும் 8 விக்கெடுகளில் ஏழு விக்கெட்டுகளை முதல் பத்துபவருக்குள் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்திய அணியின் பேட்ஸ்மன்களுக்கு இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் சமீபகாலமாகவே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர் . இதற்கு முன் பாகிஸ்தான் அணியின் ஷாஹீன் அப்ரிடி 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையின் போது இந்திய பேட்ஸ்மேன் கலை விரைவாக ஆட்டம் விளக்கச் செய்தார். தற்போது மிச்சல் ஸ்டார்க் இந்திய அணியின் டாப் ஆர்டரை கதி கலங்கச் செய்து கொண்டிருக்கிறார். இதனைப் பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் துவக்க வீரருமான சல்மான் பட் தனது கருத்தை பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

இது பற்றி பேசி இருக்கும் அவர் ” இந்தியா இந்த தோல்வியில் இருந்து விரைவாக மீண்டு வர வேண்டும். இந்திய அணி ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனில் அவர்கள் தங்கள் அணுகு முறையில் பாரிய மாற்றங்களை செய்ய வேண்டும். ஸ்விங் ஆகும் பந்திற்கு எதிரான இந்திய வீரர்களின் அணுகுமுறை நம்பிக்கை அளிக்கும் விதமாக இல்லை.ஸ்விங்கை எதிர்கொள்ள யாரும் கிரீஸை விட்டு வெளியே வர முயற்சிக்கவில்லை. அனைவரும் கிரீசுக்குள் ஆட்டமிழந்தனர்”. என தெரிவித்தார்.

மேலும் இதுபற்றி தொடர்ந்து பேசிய அவர் “இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை ஸ்டம்புக்குள் எடுத்து வருகிறார்கள் என்று நன்றாகவே தெரிகிறது. அப்படி இருக்கும்போது அதை கவுண்டர் செய்வதற்கான ஒரு மாற்று வழியை தேட முயற்சிக்க வேண்டும். தைரியமாக புதிய அணுகுமுறைகளை கண்டறிந்து செயல்படுத்தினால் தான் இந்தப் பிரச்சனையில் அவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -