இந்திய கிரிக்கெட்

சர்பராஸ் கானுக்கு அகர்கர் தந்த மோசமான பிறந்தநாள் பரிசு.. ரகானே உதவி செய்வாரா? – என்ன நடந்தது

தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இந்திய ஏ அணியில் சர்பராஸ் கான் தேர்வு செய்யப்படாத காரணம் வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

இதற்கு முன்பாக இங்கிலாந்து ஏ அணிக்கு எதிராக சர்பராஸ் தான் விளையாட தேர்வு செய்யப்பட்டார். ஒரே ஒரு இன்னிங்ஸ் மட்டும் விளையாடிய அவர் 92 ரன்கள் எடுத்தார். அதற்குப் பிறகு புச்சி பாபு தொடரில் விளையாட நாடு திரும்பினார்.

ரிஷப் பண்ட் தந்த பிரச்சனை

தற்போது தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன்பாக அந்த அணி இந்திய ஏ அணிக்கு எதிராக இரண்டு பயிற்சி டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காலில் காயமடைந்த ரிஷப் பண்ட் இந்திய ஏ அணிக்கு திரும்பி இருக்கிறார். மேலும் அவர் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ரிஷப் பண்ட் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்வார் என்ற காரணத்தினால், அதே இடத்தில் பேட்டிங் செய்யும் சர்பராஸ் கானை இந்திய ஏ அணியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். மேலும் ரஞ்சி தொடரில் விளையாடும் படி கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

பிசிசிஐ சொல்வது என்ன?

தற்போது இந்திய டெஸ்ட் அணிக்கு ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்திற்கு ரிஷப் பண்ட் முதல் இன்னும் சில ஆல்ரவுண்ட் விருப்பங்கள் இருப்பதாகவும், இந்த இடத்தில் விளையாடும் சர்பராஸ் கான் இருந்தால் அவருக்கு வாய்ப்பு இனி கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ரோகித் கில்லுக்கு அந்த துரோகத்தை செய்ய மாட்டார்.. இங்க காலங்காலமா தப்பா பேசறிங்க – கவாஸ்கர் விமர்சனம்

எனவே அவர் ரஞ்சி தொடரில் மும்பை மாநில கேப்டன் ரகானே கலந்து ஆலோசித்து மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டும் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாவது இடம் மட்டுமே காலியாக இருக்கிறது. இன்று தனது 28வது பிறந்த நாளை கொண்டாடும் சர்பராஸ் கானுக்கு தேர்வு குழு தலைவர் அகர்கர் மோசமான பரிசை கொடுத்திருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. உள்நாட்டு கிரிக்கெட்டில் சாய் சுதர்சனை விட பெரிய அளவில் சாதித்த சர்பராஸ் கான் ஏமாற்றப்பட்டு விட்டார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள்.

- Advertisement -
Published by