இந்திய அணி என்ன உன் சொந்த வீடா? விளையாடலனா கிளம்பு – கில் மீது இந்திய அணி முன்னாள் வீரர் அதிரடி தாக்கு!

0
846
Gill

இந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் இந்தியாவில் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட இருக்கிறது. இதற்கு முன்னதாக இந்திய அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட சுற்றுப்பயணம் செய்திருக்கிறது!

உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு இந்த சுற்றுப்பயணம் வீரர்களைக் கண்டறியவும், நல்ல பயிற்சியாகவும் அமையும் என்று கருதப்பட்டது. ஆனால் பலவீனமாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்து கொண்டிருப்பது எதிர்மறையான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டை மிக நன்றாக ஆரம்பித்த இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியை இழந்து வென்றது. தற்பொழுது ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளை தோற்று நிற்கிறது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக விளையாடும் கில் மற்றும் இஷான் கிஷான் இருவரது ஆட்டமும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இரண்டு போட்டிகளில் தோல்விக்கும் இவர்களது துவக்கம் மிக முக்கிய காரணமாக இருந்தது.

மேலும் கில் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெள்ளைப்பந்து தொடர்களில் அவரது பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதேபோல் இஷான் கிஷானின் கடந்த 16 டி20 ஆட்டங்கள் மிகவும் மோசமாக இருக்கிறது.

இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா “கில் ரன்கள் அடிக்க வேண்டும். அவர் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடினார். ஆனால் இங்கு அவருக்கு பிரச்சனைகள் இருப்பது போல தெரிகிறது. அவர் ஒவ்வொரு பந்துக்கும் பெரிய ஷாட்டை விளையாட முயற்சிக்கிறார். ஆனால் இது அவர் இல்லை என்று தெரியும். இந்திய அணியில் உங்களிடம் வாடகை வீடு போன்றது. சொந்தமாக வாங்கப்பட்ட வீடு போன்றது இல்லை.

- Advertisement -

நான்கைந்து போட்டிகளில் சரியாக விளையாடிய வாடகை கொடுக்கவில்லை என்றால் வெளியே கிளம்ப வேண்டியதுதான். அனைவருக்கும் அவ்வளவு வாய்ப்புதான் கிடைக்கும். சரியான முறையில் விளையாடினால் அடுத்த ஆறு மாதங்கள் தங்கிக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். கில் தற்பொழுது இந்த வகையில்தான் இருக்கிறார். ஆனால் அவரால் நிரந்தரமாக இருக்க முடியாது.

ஜெய்ஸ்வால் விளையாட வேண்டுமா? அவர் நேராக இஷான் கிஷானுக்கு மாற்று வீரராக வருவார். இஷான் கிஷானின் கடைசி பத்து ஆட்டங்களை எடுத்துக் கொண்டால் பெரிதாக ஒன்றும் இல்லை. எனவே எல்லோரும் இரண்டு வாய்ப்புகளுக்கு பிறகு மாற்ற சொல்வார்கள். என்னைப் பொருத்தவரை வாய்ப்புகள் என்பது மூன்றாக இருக்க வேண்டும். எனவே அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!