“நான் 2020 ல் சொன்னது இந்திய கிரிக்கெட்ல இப்ப அப்படியே நடந்திருக்கு” – ஆகாஷ் சோப்ரா ஆச்சரிய தகவல்!

0
816
Aakash

வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. தற்பொழுது இதில் முதலில் நடைபெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நேற்று முதல் விளையாடுகிறது!

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்து ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 150 ரண்களுக்கு சுருண்டது. ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய இந்தியா அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மாவுடன் அறிமுக இளம் இடதுகை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் துவக்க வீரராக களம் வந்தார். வழக்கமாக இந்திய அணிக்கு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் துவக்க ஆட்டக்காரராக இருக்கும் கில் இந்த முறை வரவில்லை.

ரோகித் சர்மா போட்டிக்கு முன்பாக கில் துவக்க வீரராக விளையாட விரும்பவில்லை என்று ராகுல் டிராவிட் இடம் கேட்டு தம்மை மூன்றாவது வீரராக விளையாடுவதற்கு கீழே இறக்கிக் கொண்டு இருந்தார் என்று கூறியிருந்தார்.

மேலும் இது சம்பந்தமாக பேசி இருந்த கில்லும் தானே டிராவிட் இடம் பேசி தன்னை பேட்டிங் வரிசையில் கீழே இறக்கிக் கொண்டதாகவும், தான் ஒரு சீனியர் வீரர் என்ற எண்ணத்தில் இதை செய்யவில்லை என்றும், துவக்க இடத்திற்கும் மூன்றாம் இடத்திற்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது என்றும் தெளிவுபடுத்தி இருந்தார்.

- Advertisement -

தற்போது இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா “மூன்றாம் இடத்தில் கில் விளையாடுவது எனக்கு ஆச்சரியமான விஷயம் கிடையாது. நான் 2020இல் செய்திருந்த ஒரு ட்விட்டை இப்பொழுது ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அதில் நான் கில் பத்து ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடுவார், சில ஆண்டுகளில் நீங்கள் அவரது திறமையை கண்டுபிடிப்பீர்கள் ஆனால் அது துவக்க ஆட்டக்காரராக கிடையாது, அவர் பேட்டிங் வரிசையில் கீழே வந்து விளையாடுவார் என்று கூறியிருந்தேன். தற்பொழுது அதுதான் நடந்திருக்கிறது.

ஜெய்ஸ்வால் துவக்க ஆட்டக்காரராக வந்தார். கில் மூன்றாவது இடத்தில் விளையாடுகிறார். அவர் இதை அணி நிர்வாகத்திடம் கேட்டு வாங்கி இருக்கிறார். அங்கு தான் சிறப்பாக செயல்பட முடியும் என்று அவர் நம்புகிறார். இது ஒரு சுவாரசியமான விஷயம்.

பொதுவாக இந்திய கிரிக்கெட்டில் இது போன்ற விஷயங்கள் எல்லாம் கேட்டு நடப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று ஒரு வீரர் கேட்டு வாங்குகிறார். இப்படி யாரும் கேட்பதில்லை இல்லை இந்த சொகுசு யாருக்கும் வழங்கப்படுவதில்லை என்று வைத்துக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார்!