“என்ன ஜோக் காட்டறிங்களா?.. இது இன்டர்நேஷனல் கிரிக்கெட்!” – மேத்யூஸ் பிரச்சனைக்கு ஹர்பஜன் சிங் விளாசல்!

0
24272
Harbajan

நேற்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த போட்டி சர்ச்சைக்குரிய போட்டி என்ற வகையில் காலத்திற்கும் நினைவில் இருக்கும்.

இதுவரையிலான சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் டைம் அவுட் என்கின்ற முறையில் ஆட்டம் இழந்தது கிடையாது. ஆனால் நேற்று பங்களாதேஷ்இலங்கையை அணியின் பேட்ஸ்மேன் மேத்யூசை டைம் அவுட்டும் முறையில் வெளியேற்றாத வரையில் மட்டுமே இதை நீடித்தது.

- Advertisement -

விதியின்படி அவரை ஆட்டமிழக்க செய்தோம் என்று பங்களாதேஷ் தரப்பில் கூறப்பட்டாலும், இரண்டு நிமிடங்களை அவர் வீணடித்திருக்கிறார் என்று நடுவர்கள் தரப்பில் கூறப்பட்டாலும், இன்னொரு பக்கத்தில் இரண்டு நிமிடங்கள் வீணடிக்கப்படவில்லை என்கின்ற வீடியோ ஆதாரத்தை மேத்யூஸ் கொண்டு வந்து இன்னும் பரபரப்பை கூட்டி இருக்கிறார்.

இது குறித்து இந்திய வீரர் ஹர்பஜன்சிங் பேசும் பொழுது “சரியான நேரத்திற்கு வந்து பந்தை எதிர்கொள்ள மேத்யூஸ் தயாராக இருந்தார். ஹெல்மெட்டை சரி செய்யும் பொழுது கொக்கி உடைந்து இருப்பதை கவனித்தார். இதன் காரணமாக அவர்கள் ஹெல்மெட்டை மாற்ற விரும்பினார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

எனவே அவர் புதிய ஹெல்மட்டை கேட்டார். புதிய ஹெல்மெட் கொண்டுவரப்பட்ட நேரத்தில்தான் ஷாகிப் மேல்முறையீட்டுக்கு சென்று அவர் நேரத்தை கடத்தி விட்டதாக அவுட் வாங்கினார். நடுவர்களும் கொடுத்தார்கள்.

- Advertisement -

மேத்யூஸ் ஹெல்மெட் உடைந்து இருந்ததை நடுவர்கள் அறிந்திருந்தார்கள். பின்பு அவர் உடைந்த ஹெல்மெட் உடன் விளையாடுவாரா? அப்படி அவர் விளையாடி பந்தால் தாக்கப்பட்டிருந்தால் மக்கள் அவரை கேள்வி கேட்பார்களா இல்லையா.

இப்படி ஒரு அவுட் கொடுக்கப்பட்டது சரியான விஷயம் கிடையாது. இது சர்வதேச கிரிக்கெட். இது ஒன்றும் ஜோக் இல்லை. பனி மற்றும் வீரர்கள் கீழே விழுவது போன்ற விஷயங்களுக்கு நிறைய நேரங்கள் கொடுக்கப்படுகிறது. இதில் கொடுக்கப்பட்டால் என்ன தவறு?

நடுவர்கள் இந்த விஷயத்தில் இப்படி நடந்திருக்கக் கூடாது. அங்கு நேரம் முடிந்து இருந்தாலும் கூட நோக்கம் என்ன என்பதை பார்த்து அதற்கு தகுந்தவாறு தீர்ப்பை மாற்றி இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று மக்களுக்கு முதலில் புரிய வேண்டும். அவர்களை இந்த மாதிரியான விஷயங்களில் குழப்பத்தில் வைக்கக் கூடாது!” என்று கூறி இருக்கிறார்!