“தீபக் சாஹர் காயம் பற்றிய விவரம் என்ன”? – சுரேஷ் ரெய்னா பேட்டி!

0
159

நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர்களில் வீரர்களின் காயம் என்பது தொடர்கதையாக சென்று கொண்டிருக்கிறது . போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஐபிஎல் தொடரின் முன்னணி நட்சத்திரங்கள் ஜானி பேரிஸ்டோ,ஹேசல் வுட், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் விலகிய நிலையில் மோசின் கான் முகேஷ் குமார் போன்ற இளம் வீரர்கள் போட்டி தொடரின் போது காயம் அடைந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது போட்டி நடந்து கொண்டிருக்கையில் பெங்களூர் அணியின் டாப்லீ தாயும் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். தற்போது சிஎஸ்கே அணியையும் பிறர்களின் காயம் அச்சுறுத்தி வருகிறது . முதல் போட்டி துவங்குவதற்கு முன்பாகவே அந்த போட்டியில் தோனி விளையாடுவாரா மாட்டாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி என் நிலையில் முழு உடல் தகுதியுடன் வந்து அணியை வெற்றிக்கு வழி நடத்துகிறார் தோனி.

- Advertisement -

தொடரின் துவக்கத்திலேயே அணியின் புதிய பந்தில் வீசக்கூடிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சௌத்ரி காயம் காரணமாக விலகியது சென்னை அணிக்கு பந்துவீச்சில் பெரிய பின்னடைவாக அமைந்தது. தற்போது அணியின் பிரதான பந்துவீச்சாளரான தீபக் சஹார் ஹாம்ஸ்ட்ரிங் தாயத்தினால் நேற்றைய போட்டியில் ஒரு ஓவர் மட்டுமே பந்து வீச முடிந்தது . மேலும் அவர் காயம் காரணமாக எத்தனை போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற கவலை சிஎஸ்கே ரசிகர்களுக்கும் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் விருந்து வருகிறது .

நேற்றே போட்டியில் ஒரு ஓவர் மட்டுமே வீசிய தீபக் சகார் அதன் பிறகு காயம் காரணமாக ஆடுகளத்தில் இருந்து வெளியேறினார் . இதுகுறித்து சிஎஸ்கே அணியின் முன்னாள் அதிரடி வீரரும் துணை கேப்டருமான சின்ன தல சுரேஷ் ரெய்னா வர்ணனையின் போது தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஏற்பட்ட காயத்தால் ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலக கோப்பை போன்றவற்றில் பங்கேற்க முடியாத நிலை தீபக் சகருக்கு ஏற்பட்டது . தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து இந்த ஐபிஎல் தொடரின் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருந்தார் . இந்நிலையில் தற்போது அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயம் எந்த அளவில் அவரது ஆட்டத்தினை பாதிக்கும் என்று சுரேஷ் ரெய்னா விளக்கினார்.

இது பற்றி பேசிய சுரேஷ் ரெய்னா ” தீபக் 4 அல்லது 5 ஆட்டங்களில் ஆட முடியாது என நான் நினைக்கிறேன் அவர் மீண்டும் தனது ஹாம்ஸ்ட்ரிங் தசைகளில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டார் என நினைக்கிறேன். குறைந்தது 4 அல்லது 5 ஆட்டங்களில் அவரால் விளையாட முடியாது. இது சென்னை அணிக்கு சிறிய பின்னடைவை ஏற்படுத்தும்” என தெரிவித்தார். மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் மற்ற ஆடுகளங்களை விட சென்னை சிறிது தூரத்தில் இருப்பதால் அதிக நேரம் பிரயாணத்தில் செலவிட வேண்டி வரும். இதனால் வீரர்களுக்கு சில நேரங்களில் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது” என்றும் தெரிவித்தார்.

- Advertisement -