நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தரப்பில் மயங்க் யாதவ் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இருவரும் அறிமுகமானார்கள். கம்பீர் இதே போல இன்னொரு அதிரடி முடிவையும் இதே தொடரில் எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தரப்பில் மயங்க் யாதவ் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இருவரும் அறிமுகமானார்கள். கம்பீர் இதே போல இன்னொரு அதிரடி முடிவையும் இதே தொடரில் எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகம் 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி பெஞ்ச் வலிமையை அதிகரிப்பதற்கான வேலையில் ஈடுபட்டு இருக்கிறது. அதற்காக சில குறிப்பிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு நெருக்கடி
நேற்று இந்தியா அணிக்கு அறிமுகமான ஹைதராபாத் அணிக்காக விளையாடும் நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் லக்னோ அணிக்காக விளையாடும் மயங்க் யாதவ் இருவரும், இனி ஐபிஎல் தொடரில் அன் கேப்டு பிளேயர் பட்டியலில் வர மாட்டார்கள் என்பது மிக முக்கியமானது.
எனவே இந்த இரண்டு இளம் வீரர்களையும் நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொள்ள இரண்டு அணிகளுமே மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. இப்படியான நிலையில் தக்க வைப்பு வீரர்களை வெளியிடுவதற்கான காலம் பக்கத்தில் இருக்கும் பொழுது, இந்திய அணி நிர்வாகம் இரண்டு வீரர்களையும் அறிமுகம் செய்துவிட்டது. எனவே இந்த இரண்டு ஐபிஎல் அணிகளுக்கும் ஏமாற்றமாகி இருக்கிறது.
கம்பீர் கொல்கத்தாவை காப்பாற்ற நினைப்பாரா?
இதே போல இளம் வீரரான ஹர்ஷித்ராணாவை ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி அன்கேப்டு பிளேயர் லிஸ்டில் நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைக்க ஆவலாக இருக்கும். இப்பொழுது கம்பீர் ஹர்ஷித் ராணாவையும் பங்களாதேஷ் தொடரில் இந்திய அணிக்கு அறிமுகம் செய்து கொல்கத்தா அணியின் வாய்ப்பையும் முடித்து வைப்பாரா? அல்லது தன்னுடைய சொந்த அடியான கொல்கத்தா அணியை காப்பாற்றுவாரா? என்கின்ற பேச்சுகள் சமூக வலைதளத்தில் செல்கிறது.
இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியா நிதிஷ் ரெட்டி யார் பெஸ்ட்?.. இந்த பையனுக்கு திறமை அதிகம் – தினேஷ் கார்த்திக் கருத்து
கம்பீர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவராக இருந்து வந்திருக்கிறார். எனவே அவர் இப்படியான விஷயங்களில் நேர்மை தவற மாட்டார் என்றும், நிச்சயம் இந்த தொடரில் ஹர்ஷித் ராணாவையும் அறிமுகப்படுத்தி வைப்பார் எனவும் கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.






