“அவர் அப்படி என்ன சாதனையை செய்து விட்டார்”” சின்னசுவாமி மைதானத்தில் எந்த வீரராலும் ரன்களை எடுக்க முடியும்” – ஐபிஎல் போட்டிகள் துவங்குவதற்கு முன்பே ஆர்சிபி’ஐ வம்புக்கு இழுக்கும் கௌதம் கம்பீர்!

0
134

சர்வதேச கிரிக்கெட் லீக்குகளின் திருவிழாவான ஐபிஎல் வருகின்ற 31ஆம் தேதி முதல் இந்தியாவில் துவங்கி நடைபெற இருக்கிறது. 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டி தொடர்களில் இதுவரை 15 சீசன்கள் முடிந்து இருக்கின்றன. பதினாறாவது சீசன் வருகின்ற 31ஆம் தேதி துவங்க இருக்கிறது.

ஐபிஎல் போட்டி தொடர்களை பொறுத்தவரை சென்னை மற்றும் மும்பை அணிகள் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்று வெற்றிகரமான அணிகளாக இருக்கின்றன. இவை தவிர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு முறையும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டு முறையும் கோப்பையை வென்றிருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளன.

- Advertisement -

பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வலுவான அணியாக இருந்த போதும் இதுவரை ஒரு முறை கூட அந்த அணி கோப்பையை கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏபி டிவில்லியர்ஸ் விராட் கோலி மற்றும் கிளன் மேக்ஸ்வெல் போன்ற வீரர்களை வைத்திருந்தும் ஆர்சிபி அணியினருக்கு கோப்பை எட்டாக்கனியாகவே இருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் லக்னோ சூப்பர் ஜெயன் அணியின் மெண்டருமான கௌதம் கம்பீர் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரும் மிஸ்டர் 360 டிகிரி ஆட்டக்காரரான ஏபி வி வில்லியர்சை பற்றி சர்ச்சை கூறிய கருத்தை தெரிவித்திருக்கிறார் . இது பற்றி தனது கருத்தை தெரிவித்திருக்கும் கம்பீர் ஏபி டிவில்லியர்ஸ் ஒரு திறமையான ஆட்டக்காரராக இருந்தாலும் அவரால் ஆர்சிபி அணிக்கு ஒருமுறை கூட கோப்பையை வாங்கி கொடுக்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் கம்பீர் ஏபி டிவில்லியர்ஸ் ஐபிஎல் போட்டிகளில் நிறைய சாதனைகளை செய்திருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவரது ரெகார்டுகளும் அதையே சொல்கின்றன. மேலும் அவர் தனக்கான சாதனைகளை மட்டும் தான் ஐபிஎல் போட்டியில் செய்திருக்கிறார். அதனால் அவரது அணிக்கு என்ன பிரயோஜனம் என கேள்வி எழுப்பி உள்ளார்.

- Advertisement -

அவர் தனது அதிகப்படியான ஆட்டங்களை ஆடியது சின்னசாமி மைதானத்தில் தான். அந்த மைதானத்தில் எந்த ஒரு வீரராலும் ரன்களை அடிக்க முடியும் எனவும் சர்ச்சையாக கூறி இருக்கிறார் கம்பீர். இதுவரை 170 ஐபிஎல் போட்டிகளில் ஆடி இருக்கும் ஏபி டிவில்லியர்ஸ் 5162 ரன்களை எடுத்திருக்கிறார் . இவரது சராசரி 39.17. அவரது ஸ்ட்ரைக் ரேட் 151.1. 251 சிக்ஸர்களும் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்சிபி அணிக்காக 130 போட்டிகளில் ஆடி இருக்கும் ஏபி டிவில்லியர்ஸ் 4178 ரன்களை சேர்த்திருக்கிறார். இதில் இரண்டு சதங்களும் 35 அரை சதங்களும் அடங்கும்.