வெறும் 13 ஓவர்.. தென் ஆப்பிரிக்க அணிக்கு சம்பவம்.. வெஸ்ட் இண்டீஸ் ஒயிட் வாஷ் செய்தது

0
7339
WI

தென் ஆபிரிக்கா டி20 உலகக் கோப்பைக்கு பயிற்சி பெறும் விதமாக வெஸ்ட் இண்டிஸ் நாட்டிற்கு சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இதன் முதல் இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்று தொடரைக் கைப்பற்றி இருந்தது.

இந்த நிலையில் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி ஒயிட் வாஷ் ஆபத்தில் இருந்து தப்பிக்க ஆறுதல் வெற்றி பெற வேண்டி இருந்தது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அணியின் அனுபவ துவக்க ஆட்டக்காரர்கள் குயின்டன் டி காக் 18 பந்தில் 19 ரன், ரீசா ஹென்றிக்ஸ் 6 பந்தில் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதற்கு அடுத்து வந்த ரியான் ரிக்கல்டன் 18 ரன் மற்றும் மேத்யூ பிரிட்ஸ்கி 5 ரன் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதைத்தொடர்ந்து ராஸி வான்டர் டேசன் மட்டும் தாக்குப்பிடித்து முப்பத்தி ஒரு பந்தில் 51 ரன்கள் எடுத்தார். இவருடன் இணைந்து விளையாடிய வியான் முல்டர் 28 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்தது. ஒபேட் மெக்காய் 3, குடகேஷ் மோட்டி மற்றும் சாமர் ஜோசப் இருவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் பிரண்டன் கிங் 28 பந்தில் 44, ஜான்சன் சார்லஸ் 26 பந்தில் 69, கைல் மேயர்ஸ் ஆட்டம் இழக்காமல் 23 பந்தில் 36 ரன்கள் எடுக்க, 13.5 ஓவரில் இரண்டு விக்கெட் மட்டும் இழந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இதையும் படிங்க : என் சம்பளத்தை பத்தி நிறைய கேலி இருந்தது.. அதையெல்லாம் இத வச்சுதான் சமாளிச்சேன் – ஸ்டார்க் பேச்சு

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை மூன்றிலும் வென்று தென் ஆப்பிரிக்க அணியை வெஸ்ட் இண்டிஸ் ஒயிட் வாஷ் செய்தது. தற்போது வெஸ்ட் இண்டிஸ் டி20 அணி உள்நாட்டில் மிகவும் பலம் வாய்ந்த அணியாகக் காணப்படுகிறது. எனவே வருகின்ற டி20 உலகக் கோப்பையில் அந்த அணி மற்ற அணிகளுக்கு பெரிய சவாலாக இருக்கப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.