என் சம்பளத்தை பத்தி நிறைய கேலி இருந்தது.. அதையெல்லாம் இத வச்சுதான் சமாளிச்சேன் – ஸ்டார்க் பேச்சு

0
1147
Star

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஹைதராபாத் அணியை வென்று கொல்கத்தா அணி ஐபிஎல் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி ஆட்டநாயகன் விருது வென்ற மிட்சல் ஸ்டார்க், இந்த வருடத்திற்கு பிறகு திரும்ப திரும்பிய தனது இந்த வருட ஐபிஎல் பயணத்தைப் பற்றி பேசியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் டாஸ் இழந்தது முதலில் பந்து வீசிய கொல்கத்தா அணிக்கு மிட்சல் ஸ்டார்க் மிகச்சிறந்த துவக்கத்தை பந்துவீச்சில் கொடுத்தார். முதல் ஓவரின் அவர் அபிஷேக் சர்மாவை இரண்டு ரன்களுக்கு வெளியேற்றினார். அந்தப் பந்து இந்த ஐபிஎல் தொடரின் சிறந்த பந்தாக இருக்கலாம்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து பவர் பிளேவிலேயே அவருக்கு மூன்றாவது ஓவரையும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்தார். அந்த ஓவரில் ராகுல் திரிபாதி விக்கெட்டை கைப்பற்றினார். மொத்தம் மூன்று ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட் வீழ்த்தி, ஹைதராபாத்தின் ரன் வேகத்தை முழுதாக முடக்கி விட்டார். இதுவே அவர்கள் வந்தகத்தை அதிகரிக்க விளையாடி 113 ரன்னில் மடங்க முக்கிய காரணமாக இருந்தது.

இந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் கொல்கத்தா அணியால் 24.75 கோடி ரூபாய்க்கு ஸ்டார்க் வாங்கப்பட்டார். ஐபிஎல் வரலாற்றில் மிக அதிகபட்ச விளையாட்டு இது பதிவானது. அதே நடப்பு ஐபிஎல் தொடரில் சமயத்தில் அவருக்கு ஆரம்ப போட்டிகள் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. இதனால் சமூக வலைத்தளத்தில் அவருடைய விலையை வைத்து நிறைய கேலிகள் செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் திரும்பி வந்து இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றிருக்கிறார்.

- Advertisement -

தற்பொழுது ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் பேசும் பொழுது “கொல்கத்தாவுக்கு இது சிறந்த இரவு. சிறந்த சீசன் ஆகவும் அமைந்தது. எங்களிடம் ஒரு அருமையான அணி இருந்ததாக நினைக்கிறேன். மேலும் நாங்கள் அனைவரின் பங்களிப்புகள் உடன் நிலையான அணியாக இருந்தோம். இதுவே எங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும். டாஸ் இழந்த நாங்கள் பந்தை நல்ல நிலையில் பயன்படுத்தினோம்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024: 12 முக்கிய விருதுகள்.. மொத்த பரிசு தொகை விபரங்கள்.. முழு பட்டியல் உள்ளே

இரண்டு ஆட்டங்களுக்கு முன்னால் இங்கு என்ன செய்வது என்பது குறித்தான தெளிவு ஏதும் இல்லை. ஆனால் எங்களுடைய பவுலிங் யூனிட் தங்களிடம் இருக்கும் விக்கெட் எடுக்கும் திறமை மொத்தத்தையும் வெளிப்படுத்தியது. பணம் (சம்பளம்) குறித்து நிறைய கேலிகள் வந்தது. நான் இப்பொழுது வயதாகி நல்ல அனுபவம் உள்ளவனாக இருக்கிறேன். எனவே இவற்றையெல்லாம் சமாளிக்கவும், பந்துவீச்சு தாக்குதலை வழிநடத்தவும் முடிந்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு இது மிகவும் வேடிக்கையாக இருந்தது. மேலும் எங்களிடம் ஒரு நல்ல பந்து வீச்சு தாக்குதல் இருந்ததாக நான் உணர்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -