உலக கிரிக்கெட்

வெறும் 22 ஓவர்.. 196 ரன்.. வெஸ்ட் இண்டீஸ் 19 வருட சாதனை வெற்றி.. இலங்கை அணி தோல்வி.. 3வது ODI

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வரும் நிலையில் நேற்று மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்றது.

- Advertisement -

இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் இரண்டு போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்கு இந்த போட்டியின் மூலமாக ஆறுதல் கிடைத்துள்ளது.

இலங்கை வெஸ்ட் இண்டீஸ் மூன்றாவது ஒருநாள் போட்டி

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒரு நாள் தொடரை ஏற்கனவே இழந்த நிலையில் நேற்று மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 17 ஓவர்களில் 81 ரன்கள் குவித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அப்போது நேர தாமதம் ஆன காரணத்தால் போட்டி 23 ஓவராக குறைக்கப்பட்டது. இலங்கை அணியில் விக்கெட் கீப்பர் குசால் மெண்டிஸ் 22 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். இதனால் இலங்கை அணி 23 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணிதரப்பில் சேஸ் மற்றும் ரூதர் போர்டு ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள். இதை அடுத்து வெற்றி இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டிஸ் அணி களம் இறங்கியது. இருப்பினும் டக் வொர்த் லீவ்ஸ் விதிப்படி 23 ஓவர்களில் 195 ரன்கள் குவிக்க வேண்டும் என்ற இலக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனவே டி20 தொடர் போன்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டதால் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்திலேயே அதிரடியான ஆட்டத்தை மேற்கொண்டது.

- Advertisement -

லெவிஸ் அபார சதம்

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரன்டன் கிங் 16 ரன்களில் வெளியேறினாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான லெவிஸ் அதிரடியாக விளையாடி இலங்கை அணியின் பந்துவீச்சை சிதைத்தார். 61 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 9 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர் என 102 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதன் பிறகு மிடில் வரிசையில் களம் இறங்கிய ரூதர் போர்ட் 26 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். வெறும் 22 ஓவர்களிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி 196 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

இதையும் படிங்க:பஸ்பால் டெக்னிக் மாட்டிக்கிச்சு.. பாகிஸ்தான்கிட்ட இருக்கிற இந்த தரம் எங்ககிட்ட இல்ல.. இதுதான் தோல்விக்கு காரணம் – இங்கி நாசர் ஹுசேன் பேட்டி

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்கு ஆறுதல் தேடிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக இலங்கை மண்ணில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் சதம் அடித்த லெவிஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே டி20 தொடரை கைப்பற்றிய இலங்கை அணி தற்போது ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts