உலக கிரிக்கெட்

202 ரன் வித்தியாசம்.. பாகிஸ்தான் அணி படுதோல்வி.. ஷாய் ஹோப் அசத்தல் சதம்.. வெஸ்ட் இண்டீஸ் தொடரை வென்றது

பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

- Advertisement -

நேற்று இரவு அணிகளுக்கும் இடையே மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று இருந்தன. எனவே இந்த போட்டி இறுதிப் போட்டியாக அமைந்தது.

ஷாய் ஹோப் அசத்தல்

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் 5, எவின் லிவீஸ் 37, கீசி கார்தி 17 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் ஷாய் ஹோப் அதிரடியாக ஆடி 94 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 120 ரன் குவித்தார். எட்டாவது வரிசையில் வந்த ஜஸ்டின் கிரீவ்ஸ் அதிரடியாக 24 பந்தில் 43 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. நசீம் ஷா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

முதல் மூன்று டக்

இதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சையும் அயூப், அப்துல்லா சபிக், முகமது ரிஸ்வான் என மூவரும் டக் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்கள். இதற்கு நடுவில் பாபர் அசாம் ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : ராஜஸ்தான் அணி இந்த விஷயத்தில் பிடிவாதமா இருப்பாங்க.. அதனால்தான் சாம்சன் அணியை விட்டு போறாரு – முன்னாள் சிஎஸ்கே வீரர்

பாகிஸ்தான் அணி இறுதியாக 29.2 ஓவரில் 92 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சல்மான் அலி ஆகா 30 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டிஸ் அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ஜெய்டன் ஷீல்ஸ் இந்த போட்டியில் ஆறு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -
Published by
Tags: Pak vs Wi