வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றியைப் பெற்று இருக்கிறது.
தற்பொழுது இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.
கேப்டன் இல்லாத அணி
இந்த ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பட்லர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. லியம் லிவிங்ஸ்டன் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் 18, வில் ஜேக்ஸ் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். தொடர்ந்து ஜோர்டான் காக்ஸ் 17, ஜேக்கப் பெத்தேல் 27, லிவிங்ஸ்டன் 48, சாம் கரன் 37 ரன்கள் எடுத்தார்கள்.
முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 45.1 ஓவரில் 209 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. சிறப்பாக வந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தரப்பில் இடது கை சுழல் பந்துவீச்சாளர் குடகேஷ் மோட்டி நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
டக்வோர்த் லீவிஸ் முடிவு
இதைத் தொடர்ந்து குறைந்த இலக்கை நோக்கி களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ப்ரண்டன் கிங் 56 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் எவின் லீவிஸ் 69 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்களுடன் 94 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க : டெல்லியில் பார்த்தேன்.. ரிஷப் பண்ட் இந்த ஐபிஎல் அணிக்குத்தான்.. சூசகமாக தெரிவித்த சுரேஷ் ரெய்னா
இதைத்தொடர்ந்து கீசி கார்தி 20பந்தில் 19 ரன்கள், கேப்டன் ஷாய் ஹோப் 10 பந்தில் 6:ரன் எடுத்திருந்தபொழுது மழை வந்தது. அப்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 25.2 ஓவரில் 157 ரன்கள் எடுத்திருந்தது. மழை நிற்காமல் தொடர்ந்து பெய்த காரணத்தினால் டக்வோர்த் லீவிஸ் விதிப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது!