டெல்லியில் பார்த்தேன்.. ரிஷப் பண்ட் இந்த ஐபிஎல் அணிக்குத்தான்.. சூசகமாக தெரிவித்த சுரேஷ் ரெய்னா

0
194
Dhoni

தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் ரிஷபன்ட் சிஎஸ்கே அணிக்காக விளையாட வாய்ப்புகள் இருப்பதாக சூசகமாக சுரேஷ் ரெய்னா தெரிவித்திருக்கிறார்.

நேற்று ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்கான பட்டியலை வெளியிடுவதற்கான கடைசி நாளாக இருந்தது. இந்த நிலையில் 10 அணிகளும் தங்களது வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை அறிவித்தனர். அதில் ஆச்சரியமாக டெல்லி அணி ரிஷப் பண்ட்டை விடுவித்து இருந்தது.

- Advertisement -

டெல்லி அணியின் தக்க வைப்பு

தற்போது டெல்லி அணி நிர்வாகம் அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அன்கேப்டு வீரர் அபிஷேக் போரல் ஆகியோரை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. ரிஷப் பண்ட் ஏன் டெல்லி அணியில் இடம் பெறவில்லை என்பது குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

தற்போது மெகா ஏலத்தில் புதிய அணியை டெல்லி அணி நிர்வாகம் உருவாக்குவதோடு புதிய கேப்டனையும் அவர்கள் கொண்டு வர வேண்டும். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு திரும்பிய ரிஷப் பண்ட் கேப்டன் ஆகவும் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேன் ஆகவும் சிறப்பாக செயல்பட்டிருந்தால் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தோனி உடன் ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி காயம் அடைந்து குணமடைந்து வந்த காலத்தில், அவர் அதிக நேரம் மகேந்திர சிங் தோனியின் வீட்டில் அவருடன் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருக்குள்ளும் கிரிக்கெட் தாண்டி நல்ல நட்பு நிலவி வந்தது. இப்படியான நிலையில் ரிஷப் பண்ட் வெளியே வந்திருக்கிறார்.

இது குறித்து நேற்று ஜியோ சினிமாவில் பேசிய சுரேஷ் ரெய்னா கூறும் பொழுது “நான் டெல்லி சென்றேன். அங்கு தோனியை சந்தித்தேன். அவருடன் ரிஷப் பண்ட் அப்பொழுது இருந்தார். ஒருவர் கட்டாயமாக மஞ்சள் ஜெர்சி அணிந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடப் போகிறார்” என்று கூறியிருக்கிறார். தோனி ஏற்கனவே சிஎஸ்கே அணிக்கு விளையாட உறுதியாகி இருப்பதால், ரிஷப் பண்ட்டை சுரேஷ் ரெய்னா கூறுகிறார் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதையும் படிங்க : இந்திய டி20 தொடர்.. வலிமையான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு.. உலக கோப்பை பைனலின் நட்சத்திர வீரர்கள் ரிட்டன்

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கையில் 55 கோடி ரூபாய் மட்டுமே பணம் இருக்கிறது. எனவே அதிக பணம் வைத்திருக்கும் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகளைத் தாண்டி ரிஷப் பண்ட்டை சிஎஸ்கே அணி வாங்குவது கடினம் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -