இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்கிறது.
அப்போது ஆஸ்திரேலியா ஏ அணி அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடுவதற்கு இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இதில் தற்போது ஒருநாள் தொடரில் முதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பஞ்சாப் ஜோடிகள் அசத்தல்
முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய ஏ அணிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஸ் ஆர்யா 20.3 ஓவர்களில் 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலிமையான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். பிரப்சிம்ரன் சிங் 53 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதைத்தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் களம் இறங்கினார். இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய பிரியன்ஸ் ஆர்யா சதம் அடித்து 84 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 83 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 110 ரன்கள் குவித்தார்.
413 ரன்கள் குவிப்பு
இதற்கு அடுத்து வந்த ரியான் பராக் 42 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் 67 ரன்கள், ஆயுஸ் பதோனி 27 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் எடுத்தார்கள். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 டிக்கெட் இழப்புக்கு 413 ரன்கள் குவித்தது.
இதையும் படிங்க : வெஇ டெஸ்ட் தொடர்.. இந்திய அணிக்கு டிரா கூட பெரிய சிக்கல்.. கம்பீருக்கு காத்திருக்கும் பிரச்சனை – முழு அலசல்
இதற்கு அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஹார்வே 62 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அந்த அணி 33.1 ஓவரில் 242 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்துவீச்சில் நிஷாந்த் சிந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து இந்திய அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.






