தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் வலிமையான நிலையில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்களில் சுருண்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்று விளையாடிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 81 ரன்னுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சத்மன் இஸ்லாம் 137 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். ஜெய்டன் சீல்ஸ் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
61 ரன்னுக்கு 9 விக்கெட்
இதைத்தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 85 ரன்கள் ஒரு விக்கெட் இழந்து பலமான நிலையில் இருந்தது. எனவே முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்று இந்த டெஸ்ட் போட்டியையும் எளிதில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. சில ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பங்களாதேஷ் அணிக்கு பின்னடைவாக இருந்தது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி மேற்கொண்டு 61 ரன்கள் மட்டுமே எடுத்து மீதி ஒன்பது விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பிராத்வெயிட் 39, கேசி கார்தி 40 ரன்கள் எடுத்தார்கள். எட்டு வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள். வெஸ்ட் இண்டீஸ் 146 ரன் எடுத்து சரிந்தது. நாகித் ரானா ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் எழுந்த பங்களாதேஷ்
இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணி சிறப்பான முறையில் விளையாட ஆரம்பித்தது. நேற்று மூன்றாவது நாள் முடிவில் பங்களாதேஷ் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து 211 ரன்கள் முன்னிலை பெற்று வலிமையான நிலையில் இருக்கிறது.
இதையும் படிங்க : ரோஹித் இதை செய்வார்னு எனக்கு தோணல.. அப்படி செஞ்சா அது இந்திய அணிக்கு பிரச்சனை ஆகும் – ஹர்பஜன் கருத்து
இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணிக்கு சத்மன் இஸ்லாம் 82 பந்தில் 46 ரன்கள், மெகதி ஹசன் மிராஸ் அதிரடியாக 39 பந்தில் 42 ரன்கள், ஜாகீர்அலி ஆட்டம் இழக்காமல் 49 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். சாமர் ஜோசப் இரண்டு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.






