29 வருடத்தில் முதல் முறை.. 10வது விக்கெட்டுக்கு வெஸ்ட் இண்டீஸ் வெறித்தனம்.. இங்கிலாந்துக்கு எதிராக 2வது டெஸ்டில் முன்னிலை

0
453
WI

இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்பொழுது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்கு சரியான பதிலடி கொடுத்தது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வழக்கம் போல் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. முதல் நாளில் மொத்தம் 89 ஓவர்கள் விளையாடி 416 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு போப் 121 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கில் சரியாக செயல்படாமல் இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்கின்ற காரணத்தினால் இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 416 ரன்கள் குவித்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது.

இந்த நிலையில் தன்னுடைய முதல் இன்னிங்ஸ் துவங்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த முறை பேட்டிங்கில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. கேப்டன் பிராட்வெயிட் துவக்க வீரராக 48 ரன்கள் எடுத்தார். அலிக் ஆதனஸ் சிறப்பாக விளையாடி 84 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து கவேம் ஹாட்ஜ் அற்புதமாக விளையாடி சதம் அடித்து 120 ரன்கள் குவித்தார். நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்திருந்தது. மேற்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணியை விட 65 ரன்கள் பின்தங்கி இருந்தது.

இதைத் தொடர்ந்து இன்று மூன்றாவது நாள் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 386 எடுத்து ஒன்பது விக்கெட்டுகளை இழந்து விட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியை விட முன்னிலை பெரும் வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் தவறவிட்டது போல் இருந்தது.

விக்கெட் கீப்பர் ஜோஸ்வா டி சில்வா மற்றும் ஷாமர் ஜோசப் இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி பத்தாவது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 78 பந்துகளில் 71 ரன்கள் குவித்தது. ஷாமர் ஜோசப் 27 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஜோஸ்வா டி சில்வா இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 122 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் 457 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மேலும் இங்கிலாந்து அணியை விட 41 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : இவர்தான் இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார்.. ரோஹித் கோலி இடத்தை நிரப்ப.. தினேஷ் கார்த்திக் தேர்வு செய்துள்ள 4 வீரர்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 1995ஆம் ஆண்டு 450 ரன்கள் கடந்திருந்தது. மேலும் 1995 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் விளையாடிய டெஸ்ட் போட்டி ஒன்றில் 400 ரன்களுக்கு மேல் எடுத்து முன்னிலை பெற்றிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 29 வருடங்கள் கழித்து இந்த இரண்டு நிகழ்வுகளும் நடந்திருக்கிறது.

- Advertisement -