வங்கதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிகில் லூயிஸ் மற்றும் அதான்சே ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பேட்டிங்கில் சிறப்பான நிலையில் இருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் பங்களாதேஷ் முதல் டெஸ்ட்
வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் மெஹந்தி ஹாசன் தலைமையிலான வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச தீர்மானித்தது. பிராத் வொயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிராத்வெயிட் 4 ரன்னில் வெளியேறினார்.
அவரோடு மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய மிக்கில் லூயிஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் கேர்ட்டி 0 ரன்னில் வெளியேற, அவருக்கு பிறகு களம் இறங்கிய ஹாஜ் 25 ரன்கள் குவித்தார். அவருக்குப் பிறகு களம் இறங்கிய அத்தான்சே மிக்கிலுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த இருவர் கூட்டணி ஐந்தாவது விக்கெட்டுக்கு 221 பந்துகளில் 140 ரன்கள் குவித்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வெஸ்ட் இண்டீஸ்
இதில் சதம் அடிக்கும் நிலையில் இருந்த மிக்கேல் லூயிஸ் எதிர்பாராத விதமாக 97 ரன்னில் மெகதிஹாசனின் பந்து வீச்சில் வெளியேறினார். 218 பந்துகளை சந்தித்த மிக்கில் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ருடன் 97 ரன்கள் குவித்தார். அவருடன் பாட்னர்ஷிப் அமைத்த அத்தான்சே 90 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த இருவருமே நூலிழையில் தங்களது சதத்தை தவறவிட்டனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 84 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் குவித்துள்ளது.
இதையும் படிங்க:2 நாளில் ஐபிஎல் ஏலம்.. பிசிசிஐ 2 இந்திய பவுலர்களுக்கு தடை .. மேலும் 3 வீரர்கள் சந்தேக பட்டியலில் இடம்
பங்களாதேஷ் அணி தடுமாற்றமாக இருந்தாலும் பந்துவீச்சில் டாஸ்கின் அகமது இரண்டு விக்கெட்டுகளும் இஸ்லாம் மற்றும் மெஹதி ஹாசன் மிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருக்கிறார்கள். இன்னும் நான்கு நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் வலுவான ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் இரண்டு அணிகளும் சமமாக இருப்பதால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.






