ஐபிஎல் மெகா ஏலம் 2025 இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்தும் வருகிற ஆக்ஷனில் எடுக்கவும் தயாராக இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இரண்டு வீரர்களுக்கு பந்து வீசுவதற்கு தடை விதித்தும், மேலும் மூன்று வீரர்களை சந்தேகப்பட்டியலிலும் வைத்திருக்கிறது.
விரைவில் ஐபிஎல் மெகா ஏலம்
ஐபிஎல் மெகா ஏலம் 2025 இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு ஐபிஎல் அணியும் பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் கவனத்தை செலுத்தாமல் பந்து வீசுவதிலும் திறமையான வீரர்களை வாங்குவதற்கு போட்டி போட்டு வருகிறது. மேலும் பேட்டிங் தெரிந்த பந்துவீச்சாளராக இருந்தால் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் அவருக்குச் அதிக விலைக்குச் செல்லவும் தயங்காது. சூழ்நிலை இப்படி இருக்கும் போது சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பந்து வீசுவதற்கு தடை விதித்தும் மூன்று வீரர்களை சந்தேகப்பட்டியலில் வைத்தும் இருக்கிறது.
இதில் ஐபிஎல் தொடரில் நெடுங்காலமாக விளையாடி வரும் மனீஷ் பாண்டே மற்றும் ஸ்ரீஜித் கிருஷ்ணன் ஆகியோருக்கு பிசிசிஐ பந்து வீசுவதற்கு தடை விதித்து இருக்கிறது. இவர்கள் இருவரும் பந்து வீசும் விதத்தில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக தெரிகிறது. இதனால் பிசிசிஐ இவர்கள் இருவருக்கும் பந்துவீசத் தடை விதித்துள்ளது. எனவே இந்த இருவரும் இனி வருகிற ஐபிஎல் தொடரில் பந்து வீச முடியாது. இந்த செய்தி அந்தந்த வீரர்களை சார்ந்த அணிக்கு வருத்தத்தை அளிக்கும் வகையில் அமையும்.
சந்தேகத்தில் உள்ள மூன்று வீரர்கள்
அதுமட்டுமல்லாமல் மூன்று வீரர்களை சந்தேகத்தின் பட்டியலில் வைத்திருக்கிறது. இதில் லக்னோ அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் இந்திய அணி வீரரான தீபக் ஹூடா இவரோடு மற்ற இரண்டு இந்திய வீரர்களான சௌரப் தூபே மற்றும் கேசி கரியப்பா ஆகிய வீரர்களை பிசிசிஐ சந்தேகத்தின் பட்டியலில் வைத்திருக்கிறது. இதில் தீபக் ஹூடா ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வருகிறார். இருப்பினும் லக்னோ அணியும் இவரை தக்க வைக்கவில்லை.
இதையும் படிங்க:சிஎஸ்கே எடுக்கலனா.. எனக்கு இந்த அணியில் விளையாடனும்னு ஆசை.. அதுக்கு இதுதான் காரணம் – துஷார் தேஷ்பாண்டே பேட்டி
சமீபத்தில் சில ஆண்டுகளாக இவரது பங்களிப்பு சுமாராக இருந்து வரும் நிலையில் லக்னோ அணியும் இவரை தக்க வைக்காமல் ஏலத்தில் விட்டிருக்கிறது. எனவே இவருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தால் அடுத்து இவர் செல்ல உள்ள ஐபிஎல் அணிக்கு பந்து வீச முடியாத சூழ்நிலை ஏற்படலாம். எனவே இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் மெகா ஏலம் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில் பெரிய வீரர்கள் எந்த அணிகளுக்கு செல்கின்றனர் என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.






