பங்களாதேஷ் டெஸ்ட்.. வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. முக்கிய நட்சத்திரம் அவுட்.. பெரிய ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் அமைப்பு

0
83
WI

சொந்த மண்ணில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாட இருக்கிறது. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இறுதி போட்டிக்கான வாய்ப்பை பங்களாதேஷ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஏற்கனவே இழந்துவிட்டன. இந்த நிலையில் எதிர்காலத்தில் சரியான டெஸ்ட் அணியை உருவாக்குவதற்கான முயற்சியில் இரண்டு அணிகளுமே ஈடுபட்டு இருக்கின்றன. அதற்கு உதவி செய்யக் கூடியதாக இந்த தொடர் அமையும்.

- Advertisement -

முக்கிய வீரர் அவுட்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் டெஸ்ட் அணியின் முக்கிய வீரரான வேகப் பந்துவீச்சு ஜேசன் ஹோல்டர் தோள்பட்டை காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு மறுவாழ்வுக்கான நேரம் தேவைப்படுகிறது என்று கூறப்பட்டிருப்பதால் அவரை அணியில் சேர்த்துக் கொள்ளவில்லை.

மேலும் அறிவிக்கப்பட்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் டெவின் இம்லாச், ஆண்டர்சன் பிலிப்ஸ் ஆகியோர் மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார்கள். சுழல் பந்துவீச்சாளர் கெவின் பின் பிலே மற்றும் ஜோமல் வாரிக்கன் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

பெரிய பாஸ்ட் பவுலிங் யூனிட்

இந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்துவீச்சாளர்களாக அனுபவ வீரர் கெமார் ரோச் உடன் அல்ஜாரி ஜோசப், ஜேடன் சீல்ஸ் மற்றும் ஷாமர் ஜோசப் என சிறப்பான வேகப்பந்துவீச்சு யூனிட் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அணிக்கு கேப்டனாக கிரேக் பிராட்வய்ட் தொடர்ந்து அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெத் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதியும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 30ஆம் தேதியும் துவங்குகிறது. இதற்குப் பிறகு இரண்டு வெள்ளைப்பந்து தொடர்களும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இனி ஜெய்ஸ்வாலுடன் சாம்சன்தான் ஓபனரா.. கில் கிடையாதா? – கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டி

வெஸ்ட் இண்டீஸ் அணி: கிரேக் பிராத்வைட் (கே), ஜோசுவா டா சில்வா (வி.கீ), அலிக் அதானாஸ், கீசி கார்டி, ஜஸ்டின் க்ரீவ்ஸ், கவேம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், அல்ஸாரி ஜோசப், ஷமர் ஜோசப், ஜேடன் சீல்ஸ், கெவின் சின்க்ளேர், ஜோமெல் வாரிக்கன், மைக்கேல் லூயிஸ், ஆண்டர்சன் பிலிப், மற்றும் கெமர் ரோச்.

- Advertisement -