தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. தற்போது இந்த இரண்டு அணிகளுக்கு எதிராகவும் விளையாட இருக்கும் டி20 தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து என தொடர்ந்து தலா மூன்று போட்டிகள் கொண்ட இரண்டு டி20 தொடர்களில் பங்கேற்க இருக்கிறது.
தொடர் அட்டவணை மற்றும் ஆடும் ஆடாத பெரிய வீரர்கள்
முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் இந்த மாதம் ஜூன் 6, 8, 10ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு அடுத்து அயர்லாந்து அணிக்கு எதிராக ஜூன் 12, 14, 15ம் எதிராக விளையாடி முடிக்கிறது.
மேலும் இந்த இரண்டு தொடர்களிலும் நிக்கோலஸ் பூரன் பங்கேற்கவில்லை. அதே சமயத்தில் ரோமன் பவல், ஆல் ரவுண்டர்கள் ஜேசன் ஹோல்டர் மற்றும் ஆண்ட்ரே ரசல், மேலும் அதிரடி வீரர் ரூதர்போர்டு மற்றும் ரோமாரியோ செப்பர்டு ஆகியோர் விளையாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிகள்
இங்கிலாந்து டி20 தொடர்: ஷாய் ஹோப் (கேப்டன்), ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஷிம்ரான் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹோசின், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோட்டி, ரோவ்மேன் பவல், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட்.
இதையும் படிங்க: எனக்கு பஞ்சாப் ஜெயிக்கணும்.. ஆனா அதுக்கு ஆர்சிபி ஜெயிக்கணும்.. புரியலையா ரகசியம் இதுதான் – சேவாக் விருப்பம்
அயர்லாந்து டி20 தொடர்: ஷாய் ஹோப் (கேப்டன்), கீசி கார்டி, ஜான்சன் சார்லஸ், மேத்யூ ஃபோர்டு, ஜிட் கூலி, ஷிம்ரான் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹோசின், அல்சாரி ஜோசப், எவின் லூயிஸ், குடகேஷ் மோட்டி, ரோவ்மேன் பவல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட்.






