18 வருடங்களுக்குப் பிறகு முதல் முறை.. பாக் டெஸ்ட் தொடர்.. அறிவிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி.. புதிய திறமை அறிமுகம்

0
553

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

அறிவிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி

அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில், இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிராத் வைட் கேப்டனாக தலைமை வகிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜோஸ்வா டா சில்வா துணை கேப்டனாக அணியை வழிநடத்துவார். பாகிஸ்தான் அணி தற்போது சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தை அமைத்து சொந்த மண்ணில் வெற்றி பெறுவதால் வெஸ்ட் இண்டீஸ் அணி அதற்கு தகுந்தவாறு சமீபத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் சதம் அடித்து அசத்திய அமீர் ஜாங்கோ தனது முதல் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

83 பந்துகளை எதிர் கொண்டு 104 ரன்கள் குவித்துள்ள நிலையில் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக இவரது திறமையான பேட்டிங் வெஸ்ட் இண்டீஸ் தேர்வாளர்களை ஈர்த்துள்ளது. அதேபோல சுழல் பந்துவீச்சாளர் மோட்டி திரும்ப வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியில் இணைகிறார். இவர்களோடு கெவின் சின்க்ளேர் மற்றும் ஜோமல் வாரிக்கன் ஆகியோர் சுழற்பந்து வீச்சுத் துறையில் ஒரு பகுதியாக இருப்பார்கள். மேலும் இந்த டெஸ்ட் தொடரில் சமர் ஜோசப் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

18 வருடங்களுக்குப் பிறகு முதல் சுற்று பயணம்

ஜனவரி 16ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 24ஆம் தேதியும் நடைபெற உள்ளது. ஜனவரி இரண்டாம் தேதி பாகிஸ்தான் புறப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறாம் தேதி பாகிஸ்தானில் தரையிறங்கும் என்று கூறப்பட்டுள்ளது. 18 வருடங்களுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்லும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். எனவே இதில் வெற்றி பெற வெஸ்ட் இண்டீஸ் அணி மிக தீவிரமாக செயல்படும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க:ஜடேஜா நித்தீஷ் ரெட்டியால இந்திய அணி நல்லா மாட்டிக்கிச்சு.. ஒரு முடிவு எடுக்கணும்.. காரணம் இதுதான்- புஜாரா பேட்டி

பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ள வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி : கிரேக் பிராத்வைட் (கேப்டன்), ஜோசுவா டா சில்வா (துணை கேப்டன்), அலிக் அதானாஸ், கீசி கார்டி, ஜஸ்டின் க்ரீவ்ஸ், கவெம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், அமீர் ஜாங்கூ, மைக்கேல் லூயிஸ், குடாகேஷ் மோதி, ஆண்டர்சன் பிலிப், கெமர் ரோச், ஜா கெவின் சின்க்ளேர், , ஜோமெல் வாரிக்கன்.

- Advertisement -