வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் வீரரான கர்ட்லி ஆம்ப்ரோஸ் தனது பந்துவீச்சின் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
மேலும் கிரிக்கெட்டின் நிலை குறித்து பேசிய ஆம்ப்ரோஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு குறித்தும் தனக்கு பிடித்த பந்துவீச்சாளர் குறித்தும் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
கிரிக்கெட்டில் பேட்டிங், பந்து வீச்சு, மற்றும் பீல்டிங் என்று மூன்று துறைகள் உள்ளன. ஆனால் கிரிக்கெட்டை பொருத்தவரை பேட்டிங் மட்டுமே அதிகமாக மக்களால் விரும்பப்படுகிறது. இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் விவியன் ரிச்சர்ட்ஸ், தென் ஆப்பிரிக்கா அணியின் டிவில்லியர்ஸ் இந்திய அணியின் விராட் கோலி, ரோஹித் சர்மா என்று இந்த நட்சத்திர வீரர்களுக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
பேட்டிங் மக்களிடையே எந்த அளவு ஈர்க்கப்படுகிறதோ அதே ஈர்ப்பு பந்துவீச்சில் இருப்பதில்லை. பந்துவீச்சில் மக்களை கவரக்கூடிய வீரர்கள் என்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கர்ட்லி ஆம்ப்ரோஸ், ஆஸ்திரேலியா அணியின் பிரட்லீ, தென்னாப்பிரிக்க அணியின் ஸ்டெயின் மற்றும் இந்திய வீரரான பும்ரா, இலங்கை வீரரான மலிங்கா ஆகியோரை குறிப்பிடலாம். பேட்டிங்கில் மக்களிடையே இருக்கும் ஆர்வம் பந்து வீச்சில் இருப்பதில்லை என்பதற்கு ஆம்ப்ரோ சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “ஆம் சில நேரங்களில் நானும் அதை உணர்ந்திருக்கிறேன். இதில் 90% கிரிக்கெட் பேட்டிங்க்கு ஆதரவாக இருக்கிறது. நான் உலகத்தில் சில சிறந்த பேட்ஸ்மேன்களுடன் விளையாடி இருக்கிறேன். ஆனால் நான் பந்து வீச்சாளராக இருப்பதால் நான் பந்து வீச்சு பக்கம்தான் சாய்வேன். எங்களிடமும் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர் ஆனால் எனக்கு மிகவும் பிடித்த விருப்பமான வீரர் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம்தான்.
மேலும் நான் விளையாடிய காலத்தில் எனது கிரிக்கெட் அனுபவம் குறித்து கேட்கிறீர்கள். நான் சில ஜாம்பவான் வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். ஆனால் ஆடுகளத்தை விட்டு வெளியே செல்லும்போது கிரிக்கெட் குறித்து நான் ஒருபோதும் நினைத்து பார்க்க மாட்டேன். மறுநாள் காலை எனது வேலையை துவங்கும் வரை எனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. எனவே நான் விளையாடிய காலத்தில் எனக்கு பிரச்சனை அளிக்கக் கூடிய பேட்ஸ்மேன் என்று யாரும் இருந்ததில்லை எனக் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : நான் பாபர் அசாமுக்கு.. சப்போர்ட் பண்றதே இதனாலதான்.. உங்களால முடிஞ்சா அத செஞ்சு காமிங்க – சல்மான் பட் சவால்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆம்ப்ரோஸ் 405 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 176 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய 225 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.