இங்கிலாந்து டெஸ்ட்.. வெஸ்ட் இண்டீஸ் மாஸ் பிளேயிங் XI.. வரலாற்று சாதனை வீரர் அறிமுகம்.. களைகட்டும் லார்ட்ஸ்

0
303
Anderson

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. மேலும் இந்த போட்டியுடன் இங்கிலாந்து சாதனை வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறுகிறார். இந்த போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் தன்னுடைய பிளேயிங் லெவனை முன்கூட்டியே அறிவித்திருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்புமிக்க காபா வெற்றியை பெற்ற பிறகு விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். மேலும் அந்த வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்த டேக்னரைன் சந்தர்பால், ஜஸ்டின் கிரீவ்ஸ் மற்றும் மேத்யூ சின்கிளேர் மூவரும் இந்த பிளேயிங் லெவனில் இல்லை. மேலும் இதில் டேக்னரைன் சந்தர்பால் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் இருவரும் 15 பேர் கொண்ட டெஸ்ட் அணியிலும் இல்லை.

- Advertisement -

இந்த முறை கேப்டன் கிரேக் ப்ராத்வெயிட் உடன் துவக்க ஆட்டக்காரராக மைக்கேல் லூயிஸ் என்னும் இளம் தொடக்க ஆட்டக்காரர் களம் இறக்கப்படுகிறார். வெஸ்ட் இண்டீஸ் நான்கு நாள் போட்டிகளில் இந்த முறை அதிக ரன் எடுத்த இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வரலாற்றில் செயின்ட் கிட்ஸ் தீவில் இருந்து முதல்முறையாக டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர் என்கின்ற சிறப்பை பெறுகிறார்.

மேலும் இந்த அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் இடம் பெற்று இருக்கிறார். அணியில் ஒரே ஒரு சுழல் பந்துவீச்சாளராக இடது கை சுழல் பந்துவீச்சாளர் குடகேஷ் மோட்டி இருக்கிறார். மேலும் வேகப்பந்து வீச்சாளர்களாக அல்ஜாரி ஜோசப், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஷாமர் ஜோசப் ஆகியோர் இருக்கிறார்கள்.

- Advertisement -

ஒட்டுமொத்தமாக வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் 11 பந்துவீச்சில் வலிமையாக இருக்கிறது. அதே சமயத்தில் பேட்டிங் மட்டுமே கொஞ்சம் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆனால் பேட்டிங்கில் உள்நாட்டு மிக அதிரடியாக செயல்படும் இங்கிலாந்து அணியை இவர்கள் எப்படி சமாளிப்பார்கள்? என்று பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க : இனி கோலியின் இடம் எனக்குதானா?.. தோனி பாய்க்கு சொன்ன அதே பதிலைத்தான் சொல்வேன் – ருதுராஜ் பேட்டி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டுக்கு வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன் :

கிரேக் பிராத்வைட் (கேட்ச்), மைக்கேல் லூயிஸ், கிர்க் மெக்கென்சி, அலிக் அதானாஸ், கவேம் ஹாட்ஜ், ஜேசன் ஹோல்டர், ஜோசுவா டா சில்வா (வி. கீ), குடகேஷ் மோட்டி, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப் மற்றும் ஜெய்டன் சீல்ஸ்

- Advertisement -