சிக்ஸர் மழை.. டி20 வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத ரெக்கார்ட்.. முதல் வீரராக நிக்கோலஸ் பூரன் சாதனை

0
11002
Nicholas pooran

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் டி20 பிரிமியர் லீக் தொடரின் 25-வது ஆட்டத்தில் நெவிஸ் பேட்ரியோட்ஸ் அணியும் ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் ட்ரிபாங்கோ அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் நிக்கோலஸ் பூரான் டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

இவரது அதிரடி ஆட்டத்தின் மூலமாக ட்ரிபாங்கோ அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் நெவிஸ் பேட்ரியோட்ஸ் அணியை வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை போன்று வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் டி20 பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த நெவிஸ் பேட்ரியோட்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் பிலக்சர் 61 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் என 93 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு மூன்றாவது வரிசையில் களமிறங்கிய மேயர்ஸ் 30 பந்துகளில் எட்டு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் என 60 ரன்கள் என அதிரடியாக ரன்கள் குவிக்க பேட்ரியோட்ஸ் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 193 ரன்கள் குவித்தது. இதில் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் ரோசோவ் 20 ரன்களும், லூயிஸ் 10 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. இதில் தொடக்க ஜோடி 5 ஓவர்களில் 43 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறியது. இதில் தொடக்க ஆட்டக்காரர் கேர்டி 13 ரன்களில் வெளியேற, அதற்குப் பிறகு மூன்றாம் வரிசையில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 43 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் என 93 ரன்கள் குவித்து ட்ரிபாங்கோ அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அதற்குப் பிறகு களம் இறங்கிய பொல்லார்டு கணிசமான பங்களிப்பை அளிக்க ட்ரிபாங்கோ அணி இறுதியாக 18.3 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குறித்து ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக பூரான் டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய உலக சாதனையை படைத்திருக்கிறார். இந்தப் போட்டியில் ஏழு சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ஒரு வருடத்தில் டி20 கிரிக்கெட்டில் 150 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரராக பூரான் மாறி இருக்கிறார். மேலும் ஒரு வருடத்தில் டி20 கிரிக்கெட்டில் 150 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பூரான் பெற்று இருக்கிறார்.

இதையும் படிங்க:வெளிப்படையா சொல்றன்.. இந்திய அணியிடம் நாம் இதை கத்துக்கணும் – பாகிஸ்தான் இப்திகார் அஹமத் பேச்சு

மேலும் இந்த தொடரில் ஏழு ஆட்டங்களில் விளையாடியதன் மூலமாக 275 ரன்கள் குவித்து இந்த வருடத்தில் அதிக ரன்கள் குவித்த மூன்றாவது வீரராக இருக்கிறார். பூரான் 2015ஆம் ஆண்டு ஒரு வருடத்தில் 135 சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து இருக்கிறார். 150 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ஒரு வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்று இருக்கிறார்.

- Advertisement -